சுவிஸில் புலிகளின் தாக்குதல் அணி; பரபரப்புத் தகவல்


சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அரசியல்வாதிகளைக் கொல்லும் திட்டத்தோடு புலிகளின் தாக்குதல் பிரிவான “ஹிட் ஸ்கொட்’  அணி காத்திருக்கிறது என்ற ரகசியத் தகவல் சுவிஸ் பொட்போல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் “திவயின’ நேற்று தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புலிகளின் தாக்குதல் அணி அரசியல் வாதிகளைக் குறி வைத்து காத்திருப்பதால் ஜெனிவாவுக்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளையும் அவசரமான நிலையிலும் செயற்படக் கூடிய வெளிநாட்டு சாரதி மற்றும் குண்டு துளைக்காத வாகனம் என்பவற்றை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் உள்ள புலிகளுக்கு எதிரான குழுவே, சுவிஸில் நிலைகொண்டுள்ள புலிகளின் தாக்குதல் அணி குறித்த தகவல்களை சுவிஸ் பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போதும் இந்தத் தாக்குதல் அணி நிலை  கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை அமைச்சர்கள் வழமையாகத் தங்கும் ஜெனிவாவில் உள்ள இண்டர்கொண்டிநேட்டல் என்ற விடுதிக்கு சென்ற புலிகளின் புலனாய்வாளர்கள் அமைச்சர்களின் பயணங்கள் குறித்த தகவல்களை திரட்டினர் என்றும் சுவிஸின் உயர்மட்ட பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன என்றுள்ளது.

பனை உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்பு


யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

தாய்லாந்தில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சிகளில் யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பனை சார் உற்பத்திப் பொருள்யின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தக் கூடியதான வழிமுறைகளை துறை சார்ந்த தகுதியுடைய போதனாசிரியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தற்போதைய நவீன மயப்படுத்தலுக்கு ஏற்ப பனை சார் உற்பத்திப் பொருள்களை தயார்படுத்தி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கென தெரிவு செய்யப்பட்ட பனை சார் போதனாசிரியர்கள் தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்று புதிய தொழில்நுட்ப முறைமைகளை கற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைவாக உரிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பனை சார் உற்பத்திப் பொருள்களை தரம் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக சிறுதொழில் முயற்சியாளர்கள் நன்மையடையவுள்ளனர் என்றார்.

பனை சார் உற்பத்திப் பொருள்யின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தக் கூடியதான வழிமுறைகளை துறை சார்ந்த தகுதியுடைய போதனாசிரியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவரைக் கொன்றுவிட்டு நடனமாடிய மாவோயிஸ்ட்கள் : உறைய வைக்கும் தகவல்கள்


சட்டீஸ்கரில் காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவை சுட்டுக் கொன்ற பின் மாவோயிஸ்ட்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து நடனமாடி மகிழ்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.

maoistமாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த தர்பா வனப்பகுதியில் காங்கிரசார் யாத்திரை மேற்கொண்டது, இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு மாவோயிஸ்ட்களுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. மாலை 4 மணி வாக்கில் சுமார் 300 மாவோயிஸ்ட்கள் அங்கு திரண்டு வந்து தாக்குதல் நடத்தியது தற்போது தெரியவந்துள்ள. சுமார் 27 பேரைக் கொன்று குவித்த அவர்கள் இரவு 9 மணிக்கு அங்கு போலீசார் வரும் வரையில் பல்வேறு முழக்கங்களை எழுப்பியும் நடனமாடியும் மகிழ்ச்சியைக் கொண்டாடி உள்ளனர். அணிவகுப்பில் இடம்பெற்ற 40 கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் உள்ளனர்.

காரில் இருந்தவர்களில் தங்கள் கொலைப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் இருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்த்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவர்களின் முக்கிய எதிரியான மகேந்திர கர்மாவின் கைகளைப் பின்புறமாகக் கட்டி, சுற்றி நின்று சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். அவர் உடம்பில் 150 குண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்த பிறகும்கூட தங்கள் கோபம் தணியாமல் அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், அவர் உடலை கால் பந்தை உதைப்பது போல வெறித்தனமாக உதைத்தும் ஆன அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. இது காங்கிரஸ் பிரமுகர் சத்தார் அலி என்பவரின் கண்ணெதிரே நடந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த வனப் பகுதியை சுமார் 600 சி.ஆர்.பி.எப். வீரர்கள் முற்றுகையிட்டு மாவோயிஸ்டுகளை தேடி வருகிறார்கள்.

    • Share on Facebook
    • Tweet This!
    • Subscribe by RSS

 

சிறுவன் கேள்விக்கு பதில் எழுதிய ஸ்ரீசாந்த்!


ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவல் நீட்டிப்புக்காக இன்று (27.05.2013) கோர்ட்டுக்கு வந்த ஸ்ரீசாந்தை, 8ம் வகுப்பு படிக்கும் டில்லி மாணவன் துஷார் (12), ஸ்ரீசாந்தை நெருங்கினான். இரண்டு மணி நேரமாக நடந்த விசாரணையின் போது, அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

அப்போது திரும்பிய ஸ்ரீசாந்த், அவனிடம் “என்ன விஷயம்’ என்று கேட்க, துஷார் ” ஏன் “பிக்சிங்’ செய்தீர்கள்’ என்று கேட்டான். இதற்கு “நான் இதை செய்யவில்லை’ என்று மறுத்தார். விசாரணை முடிய இருந்த நிலையில், எங்கிருந்தோ ஒரு சிறிய பேப்பரை கொண்டு வந்த துஷார், “ஆட்டோகிராப்’ கேட்டான். இதற்கு மறுத்த ஸ்ரீசாந்த் பின், கோர்ட்டை விட்டு வெளியே வந்த போது, மீண்டும் வந்து வற்புறுத்தினான். வேறு வழியில்லாத நிலையில் அந்த பேப்பரை வாங்கிய ஸ்ரீசாந்த்,” டியர் துஷார், தயவு செய்து, எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்’ என, எழுதி “ஆட்ரோகிராப்’ வழங்கினார்.

சிங்கள பிக்கு தீக்குளிக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார், பகீர் ஆதாரம் வெளியானது!


சில தினங்களுக்கு முன்பு சிங்கள பிக்கு மிருகங்களை உணவுக்காக கொல்லக்கூடாது என கேஷமிட்டவாறு தன்னைத் தானே தீயிட்டு தற்கொலை செய்யதார் என இலங்கை பௌத்த ஊடகங்கள் முக்கிய செய்தியாக பரப்பியது.

ஆனால் இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக சட்ட ரீதியான அடக்கமுறைகளக் கொண்டு வரலாம் என சிங்கள இனவாத சக்திகள் தீர்மானித்திருந்தன.

ஆனால் இப்போது இறந்த பிக்கு தற்கொலை செய்யவில்லை என்றம் அவரை தீயிட்டு கொலை செய்துள்ளார்கள் என்றும் ஆதாரத்துடன் செய்திகளை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

உண்மையில் இறந்தவர் ஒரு பிக்கு அல்ல என்றும் அவருக்கு அவ்வாறு உடை அணிவித்து கூட்டிவந்து தீயிட்டு கொலை செய்திருப்பதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றது.

ஆதார வீடியோவில் ஒருவர் இறந்தவருக்கு தீயை பற்ற வைப்பது தெளிவாக பதிவாகி உள்ளது. இது மிகவும் திட்டமிட்ட கொலை என, இந்த ஆதாரத்தை அடுத்து பலத்த கண்டனங்கள் வெளியாகியவாறு உள்ளது.monk-killed-by-extremist

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: வைகோ


திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:-

மிழர்கள் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார். அவரது இந்திய வருகைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் இலங்கையில் இன்னும் கொடூரம் தொடர்கிறது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 1940 ஆம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு நாடுகள் பொது வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர அந்தஸ்து பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.