ஐபிஎல் சூதாட்டம்… சிக்கும் 6 முன்னணி தமிழ் நடிகைகள்!


 
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். 
 
அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது,
 
“நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்,” என்றார். 
 
கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள். இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். 
 
கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். 
 
அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி


விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும், ஒரே நாளில் ரிலீசாகி மோதப்போகின்றன. இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிங்கம்-2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ரிலீசான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தலைவா ரிலீசாகும் தேதியில் சிங்கம்-2 படத்தையும் வெளியிடுவதற்காக ரீ ரிக்கார்டிங், டப்பிங் போன்ற இறுதி கட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ஒன்றாக ரிலீசாகி பல நாட்கள் ஆகின்றன. எனவே இப்படங்களின் ரிலீசை கட் அவுட், கொடி, தோரணம் என போட்டி போட்டு கொண்டாட விஜய், சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படங்கள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கையின் அதிசயம்


ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது.

இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.


 

 




வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்


முல்லைத் தீவு, வற்றாப்பளை பகுதியில் வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க முறையில் பால் வடிகின்றது.

இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுவருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர்.

5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேணப்ப நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன், விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி (வயது28) என்ற மனைவியும், விபிதா (5) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இவருக்கு சொந்தமான டிராக்டர் உள்ளது.

சொந்த விவசாய பணிக்காவும், வாடகைக்கும் இதனை பயன்படுத்தி வருகிறார். இவர் நேற்று மாலை டிராக்டரில் உழவுப் பணிகளை முடித்த பின்னர் வீட்டின் முன்னே டிராக்டரை நிறுத்தியிருந்தார். டிராக்டரின் சாவியை அதிலேயே வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் அசோகன் வீட்டுக்குள் இருந்துள்ளார். அப்போது அவரது குழந்தை விபிதா டிராக்டரின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தாள். அதில் இருந்த சாவியை திருகியவுடன் ரிவர்ஸ் கியரில் இருந்த டிராக்டர் பின்பக்கமாக நகர்ந்துள்ளது.

அந்த சமயம் பின்னால் தரையில் அமர்ந்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அசோகனின் மனைவி தனலட்சுமி (28) மீது டிராக்டர் ஏறியது. இதில் உடல் நசுங்கி தனலட்சுமி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் தனலட்சுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.