ஊடகவியலாளர்களை ஏமாற்றிய பொலிஸார்


news

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்டபோதிலும் கடந்த  வாரத்தில் நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் விசேட செயற்றிட்டங்கள் தொடர்பிலோ  எந்தவோரு தகவலும் வழங்காது ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் இன்று இடம் பெற்றது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் ஊடகவிலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் வாராந்தம் சந்திப்பு இடம் பெறுவதும் முக்கிய விடங்கள் சம்பந்தமான செய்திகள் பொலிசாரினால் ஊடகவிலாளர்களுக்கு வழங்கப்படுவது வழமை .

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடகவிலாளர்களுடனான சந்திப்பை தவித்துக்கொண்டதுடன் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த வாராந்த ஊடகவிலாளர் சந்திப்பை நடத்திவந்தார்.

எனினும் அவரும் கடந்த வாரங்களில் ஊடகவியலாளர்களது கேள்விகள்  சிலவற்றிற்கு பதிலளிக்க முடியாது கலந்துரையாடல்களை பாதியில் முடித்துக்கொண்டு சென்றிருந்தார்.

அதேபோலவே இந்த வாரத்திற்கான சந்திப்பு இன்று பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகத் எம்.மகிந்தஎக்கநாயக்க தலைமையில் இடம் பெற்றது.

வழமை போன்று இல்லாது இன்று ஊடகவியலாளாகளிடம் ஊர் பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டுவிட்டு வழமையான தகவல்கள் வழங்காது கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர். இதனால ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்


news

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் , சமயத்தலைவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தடை உட்பட மூன்று தீர்மானங்களை மாநகர சபையினால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்டப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத் முடியும். அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது. என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர சபை மேயர் அறிவித்துள்ளார்.

‘தலைவா’ ஷூட்டிங் ஓவர் : ‘ஜில்லா’ படத்துக்கு ரெடியாகும் விஜய்


டிகர் சங்கம் நடத்திய ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொள்ளாமல் ‘தலைவா’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய் அடுத்து ஜில்லா படத்திற்கு தயாராகி வருகிறார்.

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தலைவா படப்பிடிப்பில் பிஸியானார் விஜய். இந்தப்படத்தை அடுத்து அவர் ஜில்லா என்ற புதிய படத்திலும் நடிக்க ஓ.கே சொன்னார். நேசன் டைரக்ட் செய்யும் இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி செளத்ரி தயாரிக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 13- ஆம் தேதி மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பில் மோகன்லால், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படுகின்றன. மதுரையில் சுமார் 18 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிறர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்கிறார்.

ஜில்லா படத்தில் விஜய் ‘ஷக்தி’ என்ற கேரக்டரில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அசாத்சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்


news

அசாத்சாலியின் விடுதலையை வலியுத்தி யாழ்ப்பாண முஸ்லீம்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றனை இன்று நவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நடாத்தவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேஜர் அசாத்சாலி கடந்த வாரம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலையினை வலியுறுத்தி யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இணைந்து  துவாப்பிரார்த்தனையும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று பள்ளிவாசலில் மேற்கொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்று ஒரு மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரிக்க இராணுவத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூன்றுபேர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்


உலகத்திற்கு நாகரீகத்தைப் போதிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க அரசின் இராணுவத்தின் உள்ளேயே ஒவ்வொரு மணித்தியாலமும் மூன்று பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடைபெறுகிறது என இராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது. பென்டகன் அமரிக்க பாதுகாப்புச் செயலகமே வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 70 வரையிலான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினுள் நடைபெறுவதாக பென்டகன் பாதுகாப்பு தலையமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் மட்டும் இருபத்தி ஆறாயிரம் இராணுவ உறுப்பினர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. சமூகக் காரணங்களாலும், பழிவாங்கல் குறித்த அச்சத்தினாலும், நீதித்துறை குறித்த சந்தேகங்களாலும் மேலும் பலர் பாலியல் வன்முறை குறித்து முறைப்பாடு செய்யாமலிருக்கலாம் என கருதப்ப்டுகின்றது.

இத்தொகை சேர்த்துக்கொள்ளப்பட்டால் வன்முறைக்கு உள்ளாகுவோரின் தொகை பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாலியல் வன்முறைக்கு எதிரான இராணுவப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட கேணல் ஜேவ் குரூசின்ஸ்கி என்பவரே மே மாதம் ஆறம் திகதி தனது அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டார் என்பதிலிருந்து அமரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை நேரடியாகவும் ஏனைய நாடுகளைத் தமது பினாமிகள் ஊடாகவும் ஆக்கிரமிக்கும் அமரிக்காவினது கோரக் கரங்களை அதன் உள்வீட்டு அருவருப்புக்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.

 

பேருந்து மீது கல்வீச்சு: பாதிக்கப்பட்ட பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: 3 பேர் கைது


ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வன் (42). நாட்டு மருத்துவரான இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து கொடுப்பதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, நேற்று இரவு சேலம் திரும்பியுள்ளார்.

சிதம்பரத்தில் இருந்து சேலம் வரும் அரசு பேருந்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அந்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. பேருந்துக்குள் பயணம் செய்து கொண்டிருந்த செல்வனின் தலையிலும் கல் அடி விழுந்துள்ளது. இதில் மயக்கம் அடைந்த செல்வனை பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் சக பயணிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கோமா நிலையில் இருந்த செல்வம் இன்று (10.05.2013) காலை சிகிச்சை பலனின்றி 9 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல்துறையினர், அரசு பேருந்து மீது கல்வீசியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக செல்வனின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

-நமது நிருபர்