மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறேன் : சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அவரது அலுவலகத்தில்  செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,  ‘’மே-18ல் கடலூர் புதுநகரில்  மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு பேரணி நடைபெறும்.  காலை முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினர்.

அந்த பிறமாநில தலைவர்கள் யார்?

அவர்கள் யார் யார் என்று இப்போது சொன்னால் அவர்கள் வருவதை தடுத்துவிடுவார்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதே?

எங்களுக்கும் அந்த நிலைதான் இருந்தது.  அதையும் மீறி நாங்கள் அனுமதி பெற்றிருக்கிறோம்.

சாதிய ரீதியாக தமிழ்நாட்டில் நடந்துவரும் பிரச்சனை பற்றி?

திருமாவளவனும் ராமதாஸூம் கூட்டணிக்காக ஒன்று சேர்ந்தார்கள்.  அவர்கள் மக்களுக்காக  ஒன்று சேர்ந் திருந்தால் நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கியிருக்க தேவை இருந்திருக்காது.

சுப்பிரமணியசாமி தமிழர்களை பொறுக்கி என்று சொல்கிறாரே?

பெரிய அரசியல் தலைவர்கள் பேசும்போது அதை நாம் விமர்சிக்கலாம். உதிரிகள் பேசுவதை நாம் ஏன் கணக் கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு


மேலே போட்டோவில் உள்ள வீடுதான், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புடன் மறைந்திருந்த வீட்டின் தற்போதைய தோற்றம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில்தான் இந்த வீட்டை ராணுவத்தினர் கண்டு பிடித்தனர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இந்த வீடு, ஆனந்தபுரம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும், தற்போது அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரமும் இந்த வீட்டுக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும்  கொழும்புவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.