பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா??


உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலை கட்டிய மன்னன். உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவருடைய புகழை இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!

இந்த பெரியவரை பாராட்டித்தான் ஆகணும்! தமிழக அரசு இதை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்தால் பரவாயில்லை!

சோமாலியாவில் இரண்டு ஆண்டுகளில்மட்டும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,000!


இறந்தவர்களில் அதிகமும் ஐந்து வயதிற்க்கு உட்பட்ட குழைந்தகள்.

கோதுமை போன்ற உணவு உற்பத்தி அளவுக்கு அதிகமாக இடம் பெற்றால்.தனது பண்டத்தின் பெறுமதி உலகில் குறைவடைந்து விடும் என்ற காரணத்தினால் மேலதிக உற்பத்தியைகடலில் கொட்டும் அமெரிக்கா அல்லது கோதுமையை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்காக கோதுமை பண்ணை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் நினைத்து இருந்தால் சோமாலியாவின் பஞ்சம் துடைத்து எறியபட்டு இருக்கும்.எண்ணெய் வளம் கொழித்த நாடுகளில் ஆயுத யுத்தமும் வறுமையில் உலவும் நாடுகளில் பட்டினி யுத்தமும் நடத்தி மக்களை கொல்லும் வல்லாதிக்க சக்திகள் வாழும் காலம் வரை சோமாலியாக்கள் வாழும்..அதுவே உலகம் வீழவும் வழி வகுக்கும்…

மனிதம் தொலைத்த உலகின் மனசாட்சி சோமாலியா!!!

15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது


வாணியம்பாடி தாலுக்கா வலையம்பட்டு  அடுத்து ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பாவு என்பவரின் மகன் பாரதி வயது 26 என்பவர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .

இதனால் பாரதியை கைது செய்து பிரிவு  376 ன் கீழ் வழக்குக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 1 ம் தேதி பெண்ணை கடத்தி சென்று கை கால் கட்டிவிட்டு வாயில் துணியை துருத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்வது இனத்துவேஷம் இல்லையா? மனோ கணேசன்


ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழ வேண்டும் என்றும், வடக்கில் அரசியல் உரிமைகள் கேட்டால் கொழும்பில் வாழும் தமிழருக்கு ஆபத்து என்றும் கருத்துகள் தெரிவிப்பது இனத்துவேஷம் இல்லையா? இந்த கருத்துகளை சொல்லி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை.

ஆனால் அதிகாரத்தை பகிர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழும் நாட்டை கட்டி எழுப்ப எம்முடன் இணைந்து செயற்படும் அசாத் சாலியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது என்ன நியாயம்? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்தவின் கவனத்திற்கு காணி பறிப்பு;


news

படையினரின் தேவைக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்பு விவகாரத்தால் மக்கள் அரசின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் விடயத்தை நேரடியாகக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று விரைவில் ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக நம்பகரமாக அறிய முடிகிறது.
வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் சுமார் 10,000 ஏக்கர் நிலம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் படைகளின் தேவைக்காகக் கையகப்படுத்தப்படவுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான அறிவித்தல்களும் அந்தந்த இடங்களில் ஒட்டப்பட்டுவிட்டன.
கடந்த திங்கட்கிழமை வலி. வடக்கிலும் காணி சுவீகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்குகிழக்கு மாகாணங்களின் காணி ஆணையாளர்கள், காணி சுவீகரிப்பு அலுவலர்கள், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கி விரைவில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

மனித உரிமை தொடர்பில் லண்டனில் முக்கிய பேச்சு; இலங்கை மனித உரிமைக் குழு அதிகாரிகளைச் சந்தித்து விவரம் திரட்டினார் பொதுநலவாய செயலாளர் நாயகம்


news

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொதுநலவாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சம்பந்தமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை  மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்.

லண்டனில் நேற்றுமுன்தி னம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா சிறிவர்ண மஹாநாமஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், வவுனியா இணைப்பாளர் எம்.ரோஹித பிரியதர்ஷன, மட்டக்களப்பு இணைப்பாளர் அப்துல் கரீம் அப்துல் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலவரங்கள், மீள்குடியேற்றம், மும்மொழிக் கொள்கை, வடக்கு, கிழக்கு நிலைவரங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பாக பொது நலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மா இலங்கைக் குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க மேலும் செயற்பாடுகள் அவசியம் என்றும், இனங்களுக் கிடையிலான ஐக்கியம் கட்டியெழுப்பட வேண்டும் என்றும் இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கமலேஷ் சர்மா, இதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் கமலேஷ் ஷர்மா இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணம் சம்பந்தமாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கவுள்ள உதவித்திட்டங்கள் சம்பந்தமாகவும் இச்சந்திப்பில்  கருத்துப் பறிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்குழு கூட்டம் கடந்த 26 ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்படாவிட்டாலும், குறித்த மாநாடு முடிவடைந்தப் பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்த கமலேஷ் சர்மா, பொது நலவாய மாநாடு திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பை விடுத்தார்.
இலங்கை அரசு, பொதுநலவாய அமைப்பின் கொள்கைப் பிரகடனங்களை மீறிச்செயற் படுவதால் அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்துவந்த நிலையிலேயே கமலேஷ் சர்மா இந்த அறிவிப்பைவிடுத்தார்.
பொதுநலவாயத்தின் இந்த முடிவானது, கனேடிய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இலங்கை மனித உரிமை நிலைவரங்களை கோடிகாட்டி அங்கு மாநாட்டை நடத்தக்கூடாது என கனேடிய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.