இதன் அழகில் மயங்காதவர்களா நீங்கள்! கண்டிப்பா இருக்க முடியாது


ஜெய்ப்பூர் சுற்றுலா சென்றாலே அதனை நாம் ராஜ சுற்றுலா என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.

ஜெய்ப்பூரின் பளிச்சிடும் சுற்றுலா இடங்கள்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து போகிறார்கள்.

1729 ஆம் ஆண்டு தொடங்கி 1732 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அரண்மனை பல்வேறு கட்டிடங்களை கொண்டு ஜொலிக்கிறது. மொகலாய, ராஜஸ்தானி கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட அரண்மனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர்மந்தர்

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் ‘ஜந்தர்மந்தர்’ என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.

இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.

வானவியல் கருவிகள் இங்குள்ளன. ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் ‘யந்த்ரா மந்த்ரா’. இதில் ‘யந்த்ரா’ என்றால் கருவிகள், ‘மந்ந்ரா’ என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும்.

இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.

யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்டா கோவில்

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த கல்டா கோவில் ஒரு வைணவத் தளமாகும். கல்வா என்னும் துறவி இங்கு பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ராஜஸ்தானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புரதான சின்னங்களுள் ஒன்றாகவே காட்சி அளிக்கிறது.

ஆமர் கோட்டை

ஜெய்ப்பூரிலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆமர் கோட்டை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. ராஜபுத்திர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குகிறது.

பளபளக்கும் சிவப்பு கற்களின் உதிவியோடு, பளிங்கு கற்களை சேர்த்து நேர்த்தியாக அமைந்துள்ள இந்த கோட்டை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறையினுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டையை ஒட்டியே அமைந்துள்ள அரண்மனையும் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனைக்கு முன்னர் இந்த இடத்தில் தான் மன்னர்கள் வசித்து வந்தனர்.

நஹர்கர் கோட்டை

இதுவும் ஒரு வித்தியாசமான கோட்டை. 1734 ல் கட்டப்பட்ட இந்த கோட்டை ஜெய்ப்பூரின் அரணாக விளங்கியது. இன்று ஜெய்ப்பூரின் அடையாள சின்னமாக விளங்குகிறது.

மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், ஜெயப்பூரின் அழகிய காட்சியையும் காண மக்கள் வெள்ளம் இங்கு கூடுகிறது. மேலும் கண்களின் பார்வைக்கு வித்தியாசத்தையும், செவிக்கு வரலாற்றையும் இது தரும் என்பதில் மாற்றமில்லை.

டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு


இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.

நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.

இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.

216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.

“மோனாலிசா” -ரகசியம்


10173421_436231453178162_1142758375_nலியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர். செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும். சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்

 

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்…


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

 

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

ரூ.60 லட்சத்திற்கு கன்னித்தன்மையை ஏலம் விடும் மாணவி…..


பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ 60 லட்சத்திற்கு ஏலம் விடப் போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

பிரேஸில் நாட்டை சேர்ந்த 21 வயது மாணவி கேத்தரினா மிக்லிஒரினி. இவர் ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி ஆன்லைன் மூலம் ஏலம் விட்டார். அப்போது பலநாடுகளைச் சேர்ந்த பலர் அந்த ஏலத்தில் பங்கெடுத்த போதும், ஜப்பான் நாட்டை சேர்ந்த நட்சு,அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர். ஜேக் ரை மற்றும் இந்தியாவை சேந்ரத் ருத்ரா ஜட்ட்ர்ஜி ஆகியோரிடையே ஏலம் கேட்பதில் கடும் போட்டி நிலவியது.

கடைசியாக, 2 லட்சம் பவுண்டுகள் பேரத்தில் நட்சு வெற்றி பெற்றார். ஆனால் காரணம் தெரிவிக்கப்படாமல் அந்த ஒப்பந்தம் முறிந்து போனதாக அறிவித்தார் கேத்தரினா. இந்நிலையில், தற்போது மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவெடுத்துள்ளாராம் கேத்தரினா.

ஏலத்திற்கான குறைந்த பட்சத் தொகையாக ரூ 60 லட்சம் கோரி இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார் இம்மாணவி. மேலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கெடுக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.

இம்முறை, ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் கேட்பார்கள் என கேத்தரினா நம்பிக்கைத் தெரிவித்துள்ள கேத்தரினா, ஏலத்திற்கான கடைசித் தேதியாக டிசம்பர் 12ஐ குறிப்பிட்டுள்ளார்.

இந்த தூண் இடிந்தால் உலகமே அழிந்து விடுமாம்…..


மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது.

5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.