இதன் அழகில் மயங்காதவர்களா நீங்கள்! கண்டிப்பா இருக்க முடியாது


ஜெய்ப்பூர் சுற்றுலா சென்றாலே அதனை நாம் ராஜ சுற்றுலா என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.

ஜெய்ப்பூரின் பளிச்சிடும் சுற்றுலா இடங்கள்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து போகிறார்கள்.

1729 ஆம் ஆண்டு தொடங்கி 1732 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அரண்மனை பல்வேறு கட்டிடங்களை கொண்டு ஜொலிக்கிறது. மொகலாய, ராஜஸ்தானி கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட அரண்மனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர்மந்தர்

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் ‘ஜந்தர்மந்தர்’ என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.

இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.

வானவியல் கருவிகள் இங்குள்ளன. ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் ‘யந்த்ரா மந்த்ரா’. இதில் ‘யந்த்ரா’ என்றால் கருவிகள், ‘மந்ந்ரா’ என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும்.

இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.

யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்டா கோவில்

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த கல்டா கோவில் ஒரு வைணவத் தளமாகும். கல்வா என்னும் துறவி இங்கு பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ராஜஸ்தானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புரதான சின்னங்களுள் ஒன்றாகவே காட்சி அளிக்கிறது.

ஆமர் கோட்டை

ஜெய்ப்பூரிலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆமர் கோட்டை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. ராஜபுத்திர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குகிறது.

பளபளக்கும் சிவப்பு கற்களின் உதிவியோடு, பளிங்கு கற்களை சேர்த்து நேர்த்தியாக அமைந்துள்ள இந்த கோட்டை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறையினுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டையை ஒட்டியே அமைந்துள்ள அரண்மனையும் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனைக்கு முன்னர் இந்த இடத்தில் தான் மன்னர்கள் வசித்து வந்தனர்.

நஹர்கர் கோட்டை

இதுவும் ஒரு வித்தியாசமான கோட்டை. 1734 ல் கட்டப்பட்ட இந்த கோட்டை ஜெய்ப்பூரின் அரணாக விளங்கியது. இன்று ஜெய்ப்பூரின் அடையாள சின்னமாக விளங்குகிறது.

மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், ஜெயப்பூரின் அழகிய காட்சியையும் காண மக்கள் வெள்ளம் இங்கு கூடுகிறது. மேலும் கண்களின் பார்வைக்கு வித்தியாசத்தையும், செவிக்கு வரலாற்றையும் இது தரும் என்பதில் மாற்றமில்லை.

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்


yaalvili-news-1stveppanjaffan

இன்று இலங்கை தமிழர்கள் பரவலாக உலகம் முழுக்க வாழ்கிறார்கள் , கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட. ஆனால் இதற்கு முன்பு ஈழ தமிழர்களின் குடியேற்றம் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்டது. கல்வித்துறையில் சிறந்து விளங்கியதால், பிரித்தானியர் யாழ்ப் பாண தமிழரை நிர்வாகம் சார்ந்த தொழிலுக்கு ஈடுபடுத்தினர். பலர் மலாயா ரயில் சேவை நிரவாகத்தில் வேலை செய்தனர்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர் தமக்கென ஒரு அடித்தளத்தை கலாசாரம், மதம், மொழி சார்ந்து ஏற்படுத்தினர். ஆனால் இந்த ஏற்பாடுகள் பல காலங்கள் நீடிக்கவில்லை, காரணம் முதலாம் உலக போர். ஐரோப்பாவில் ஜெர்மனி இக்கும் பிரித்தானிய- பிரான்ஸ் நேச படைகளுக்கும் இடையேயான பல லட்சம் உயிர்களை பறித்த கொடூர போர்.

போரின் ஆரம்பத்தில் விமானத்தின் பயன்பாடு ஆரம்ப நிலையே (விமானம் 1903 ம் ஆண்டு ரைட் சகோதரர்களால் கண்டு பிடிக்கப்பட்டது ) . முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம், எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

புதிய தாக்குதல் போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது. மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் அல்மா பேக்கர் என்பவர் , வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் கோலாலம்பூர் நில அளவைகள் திணைக்களத்தில் உயர் பதவியில் இருந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் Penang, Kuala Lumpur, Taiping, Pahang, Selangor, உட்பட பல இடங்களில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து 2250 பவுண்ட்ஸ் நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை செய்ய பங்களிப்பு செய்தார்.

இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது. இவ் விமானம் 22/12/1915 இல் பிரித்தானிய அரசிடம் கையளிக்கப்பட்டது.

இந்த இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

jaffna_war_flight02

தமிழகத்தில் கோடி தமிழர்கள் இருந்தும் என்ன செய்தோம்? – ஒரு சூடான உண்மை தகவல்


என் நண்பர் ஒருவர் வெளி நாட்டில் இருக்கிறார்.அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார். அதை கேட்டு நான் திகைத்து போனேன்.

Tnmapஅவர் சொன்னார்? நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன்நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுறிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழி தானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா என்று கேட்டான் .நான் ஆச்சரியத்தோடு ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. ஈழத்தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேக்கிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிறார்கள். அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. அவர்கள் குருதி சிந்தி நடத்திய அந்த வீரம் செறிந்த போராட்டம் தான் உலகத்துக்கே தமிழனை அடையாளம் காட்டியுள்ளது என்பதையும் நாம் மறக்க கூடாது…

இன்றும்  அந்த ஈழ தமிழ் மக்களின் பேசுமொழி இனிய தூய தமிழாக இருப்பது வியப்புக்குரியது.. நாம் பேசும் வார்த்தை வேறு…. பன்னாட்டு மொழி கலந்திருக்கும் அனால் எழுதும் மொழி வேறு எனவே தூய தமிழில் எழுதுவதற்கு நாம் கடினப்படுகிறோம். அனால் ஈழ தமிழர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினாலும் பன்மொழி தேர்ச்சி இருப்பினும் அவர்கள் தமிழில் முடிந்தவரை பிற மொழி கலக்காதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். வெளிநாட்டவர்களுடன் நாம் கதைக்கும் போது ஆங்கிலத்தில் தமிழ் கலக்காதவாறு கடினப்பட்டு கதைத்தாலும் எம் மொழியில் தாராளமாக பிற மொழியை கலப்பது எந்த வகையில் நியாயம்?

ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் கூறியது போல ” தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்பவர்களை பார்ப்பதற்கு ஈழ நாட்டிற்கு செல்ல வேண்டும்”  என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. 

வேற்று கிரக வாசிகளுடன் பேச தமிழ் மொழி???


1976 வாவ் அலைவரிசை பத்தி யாருக்காவது தெரியுமா? வேற்று கிரவாசிகள் அனுப்பியது அப்படின்னு நாசா முடிவு பண்ணிச்சி.

ஒரு வேல வேற்று கிரவாசிகள் பூமிக்கு வந்தா என்ன மொழி பேசுவாங்கன்னு ஆராய்ச்சி பண்ணுனாங்க, அப்போம் கிடைச்ச தகவல் என்னனா……

உலகத்தில இருக்குற பழமையான மொழிகளை முதலில் ஆராய்ந்து பார்த்தார்கள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர், வேற்று கிரவாசிகள் பேசினால் அவர்களுடன் தொடர்புகொள்ள ஆசிய மொழிகள் இரண்டு மொழிகள் உறுதி செய்யப்பட்டது. அது என்ன மொழி தெரியுமா???

தமிழும், சீனா மொழியும் …… இனி சொல்லவா வேணும் சீக்கிரமா ஷேர் பண்ணுங்க…

தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் !


வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது ” தெள்ளாற்றுப் போர் “. இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.” தெள்ளாறு “, இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான்,பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர்,வெறியலூர்,வெள்ளாறு,பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !. அது முதல் நந்திவர்மன் ” தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் ” என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற ” நந்திக் கலம்பகத்தில் ‘ இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர்.பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு !.விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன் , ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த “தெள்ளாறு” தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே ” சுந்தர பாண்டியன் ” சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் !.தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் !. ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு,ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும் ?!..

(SOURCE : ” வந்தவாசிப் போர் – 250 என்ற புத்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி )

Photo: தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் !.</p>
<p>வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது " தெள்ளாற்றுப் போர் ". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.</p>
<p>" தெள்ளாறு ", இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான்,பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்,அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர்,வெறியலூர்,வெள்ளாறு,பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர் !. அது முதல் நந்திவர்மன் " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " என போற்றப்பட்டான்.இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற " நந்திக் கலம்பகத்தில் ' இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர்.பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.</p>
<p>அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு !.விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன் , ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ? அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே " சுந்தர பாண்டியன் " சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான்,பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது, இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !. </p>
<p>இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் !.தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் !. ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ? இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு,ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும் ?!..</p>
<p>(SOURCE : " வந்தவாசிப் போர் - 250 என்ற புத்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி )

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் ” !!.


உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் ” !!.இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்கள
ை தட்டினால் ” சப்தஸ்வரங்கலான ” ” ச,ரி,க,ம,ப,த,நி ” என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி ” போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது !! அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் ! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் ! .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத்தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. “In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந்தது !!. ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது ” தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் ” சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை ,ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை ! இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த ” இசைத்தூண்கள் ” ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும்,கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம் !தேடல் தொடரும்…

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.