நீரிழிவு, உடற்பருமனை கட்டுப்படுத்தும் குடைமிளகாய்


மஞ்சள் நிற குடைமிளகாய்.

மஞ்சள் நிற குடைமிளகாய்.

நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை அடையாளம் கண்டுள்ளது புதிய ஆய்வு ஒன்று.

வாழ்க்கை முறை காரணிகளால் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்வது ‘நீரிழிவுடற்பருமன்’(Diabesity). இந்த புதிய ஆய்வில் உணவுப் பழக்கமுறைகளினால் உடற்பருமன், நீரிழிவு நோய்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது .

சி.எஸ்.ஐ.ஆர்.-ல் உள்ள ஆய்வாளர்கள் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதில் அதி நீரிழிவு மற்றும் அதி உடற்பருமனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

பொதுவாக குடல்சுவரில் காணப்படும் ஆல்பா-குளூக்கோசிடேஸ் என்ற சுரப்பியே கார்போஹைட்ரேட்டுகளை குளூக்கோஸாக மாற்றுகிறது. அதே போல் கணையத்தில் உள்ள சுரப்பி ஒன்று கொழுப்பை உடற்பருமனுக்குக் காரணமாகும் அமிலமாக மாற்றுகிறது.

இந்த ஆய்வில், மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்கள் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் லிபிட்களின் சீரணத்தை மெதுவாக்குக்கிறது.

பச்சைக் குடைமிளகாயைக் காட்டிலும் சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமாகும் 2 சுரப்பிகளை ஓரளவுக்கு மஞ்சள் குடைமிளகாய் கட்டுப்படுத்துகிறது. பச்சைக் குடைமிளகாயைக் காட்டிலும் மஞ்சள் குடைமிளகாய் இரட்டிப்புடன் வேலை செய்கிறது என்று முன்னணி ஆய்வாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி தெரிவித்தார்.

கார்போஹைட்ரேட்கள் மற்றும் லிபிட்களின் சீரண சக்தியை ஓரளவுக்கு தாமதப்படுத்துவதன் மூலம் குளூக்கோஸ் சேர்மானத்தை தடுக்க முடிகிறது என்கிறது இந்த ஆய்வு.

பச்சை குடைமிளகாயை விட மஞ்சள் குடைமிளகாய் சிறந்த தெரிவு என்கிறார் அசோக் குமார் திவாரி. சிகப்புக் குடைமிளகாய் கொழுப்புச் சத்துகள் உடற்பருமன் கூறுகளாக மாறுவதை நன்றாகத் தடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் நீரிழிவைப் பொறுத்தவரை சிகப்பு குடைமிளகாயின் விளைவும், பச்சைக் குடைமிளகாயின் விளைவும் ஏறக்குறைய ஒன்றுதான் என்கிறார் டாக்டர் அசோக் குமார் திவாரி.

மேலும் ஃப்ரீ ரேடிகல் என்று அழைக்கப்படும் நிலையற்ற பிராணவாயு மூலக்கூறுகள் வாழும் செல்களை சேதப்படுத்தக்கூடியது. இதனால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகிறது. இதன் தீவினைகளைத் தடுக்கும் anti-oxidant-களாக மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய் பயன்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

பெண்கள் ஏன் கால் மேல கால் போட்டு உட்கார கூடாது???


பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்…

சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்…

இது அவர்களது நன்மைக்காகத்தான்…

என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

தலைவலி குணமாக


1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்தி¡¢ இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

9. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீ¡¢ல் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்

19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்…..”

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்…


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

 

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

நீண்ட ஆயுளைத் தரும் ஆரோக்கிய சமையல் – இதோ சில டிப்ஸ்!


இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்டது.

 

வேகமாக செல்லும் மக்கள் இப்போது நம்பியிருப்பது ஃபாஸ்ட் ஃபுட்டை தான். பின் எப்படி ஆரோக்கியம் நிலைக்கும்ப சரி, ஆரோக்கியத்தை காக்க வேண்டுமா? இந்த வருட இறுதிக்குள் உடல் எடை குறைய வேண்டுமா?

 

அல்லது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா அதற்காக ஒன்றும் கடுமை வாய்ந்த உணவுப் பழக்கத்தை கடை பிடித்து ஐஸ்க்ரீம், கேக் போன்ற டெசர்ட்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

 

அதற்கு பதிலாக அன்றாடம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களும், சமைக்கும் முறையில் சிறிய மாற்றங்களையும் கொண்டு வந்தால் போதுமானது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கலோரிகளை குறைத்து கொழுப்பை எரிக்க சில எளிய சமையல் வழிமுறைகளை பற்றிக் கொடுத்துள்ளது. அதைப்படித்து, அதன்படி சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் ஆரோக்கியமாகவும், சரியான எடையுடனும் இருக்க முடியும்.

 

கொழுப்பின் அளவை குறைந்த அளவில் பராமரிக்கவும் :

 

கொழுப்பை சுத்தமாக ஒதுக்க தேவையில்லை, அதனை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சுத்தரிக்கப்படாத இயற்கை கொழுப்புகளை கொண்ட ஆலிவ் ஆயில், நட்ஸ், விதைகள், மீன், சோயா மற்றும் அவகேடோ/வெண் ணெய் பழங்களை உபயோ கிக்கலாம். அதற்கு காரணம் உடல் நலத்திற்கு துணை புரியும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் இவைகளில் அடங்கியுள்ளது.

 

ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்தவும் :

 

கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள பாலுக்கு பதி லாக, ஆடை நீக்கிய பால் அல்லது பசுவின் பாலை பயன்படுத்துங்கள். மேலும் தயிர் வேண்டுமானால், ஆடை நீக்கிய பாலில் இருந்து தயார் செய்து கொள்ளுங்கள்.

 

பொரியல் உணவுகளை தேர்ந்தெடுக்கவும் :

 

உணவுகளில் நிறைய பொரியல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

 

சமைக்கும் ஸ்டைலை மாற்றவும் :

 

வாட்டுதல், வதக்கல், வேக வைத்தல், கனலில் வேக வைத்தல், மெதுவாக சமைத்தல், வறுத்தல் போன்ற சமைக்கும் ஸ்டைல்களை பின்பற்றுங்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளாகும்.

 

வெண்ணெய் பயன்படுத்துதலை தவிர்க்கவும் :

 

வெண்ணெய் பயன்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். அதேபோல் நீண்ட நேரமாக பொரித்த உணவுகளையும், நீண்ட நேரம் வதக்கிய விலங்கு கொழுப்பு அடங்கியுள்ள உணவுகளையும் தவிர்க்கவும். ஏனெனில் அவை ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.

 

நான் ஸ்டிக் சட்டிகளை பயன்படுத்தவும் :

 

நான் ஸ்டிக் சட்டிகளை சமைக்க பயன்படுத்தினால், அதிக எண்ணெய் மற்றும் வெண்ணெய் செலவாகாது. அதனால் ஆரோக்கியமான உணவை சமைக்கலாம்.

 

சமையல் ஸ்ப்ரே பயன்படுத்தவும் :

 

சமைக்கும் போது கொழுப் பின் அளவை குறைக்க வேண்டுமா? அப்படியானால் சமையல் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். இந்த ஸ்ப்ரேவில் எண்ணெயை லூப்ரிகண்டாகவும், வெண் கருக்கொழுப்பை குழம்பாக்கியாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை சிறிது அளவு சமையலுக்கு பயன்படுத்தினால் போதுமானது.

 

உப்பு சேர்க்கும் முறை :

 

கைக்கு வந்த அளவில் உப்பை உணவில் சேர்ப்பதற்கு பதில் முதலில் உணவை ருசித்து பாருங்கள். சமைத்து முடிக்கும் நேரத்தில் சமைத்த காய்கறிகளில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய், வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம். இது உப்பு சேர்த்தால் கிடைக்கும், அதே சுவையை நமக்கு அளிக்கும்.

 

எண்ணெய்க்கு பதில் மாற்றுப் பொருட்களின் பயன்பாடு :

 

எண்ணெய்க்கு பதிலாக மாமிசத்தை அவித்த நீர், ஒயின், எலுமிச்சை ஜுஸ், வினிகர் அல்லது தண்ணீரை கூட பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்கும்.

 

மீன்களை அதிகமாக உண்ணுதல் :

 

அதிக அளவு புரதம், குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் தேவையான அளவு ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ள மீன்களை அதி கமாக உண்ணுங்கள்.

 

குறைவான கொழுப்பளவை கொண்ட பால் பொருட்களை பயன்படுத்துங்கள் :

 

சூப் அல்லது சாஸ்களில் க்ரீமை பயன்படுத்துவதற்கு பதில், குறைவான கொழுப்பை கொண்ட தயிர், பால், ஆடை நீக்கிய பால் அல்லது கார்ன் ஸ்டார்ச்சை பயன்படுத்தலாம்.

 

அதிக உப்புள்ள பண்டங்களை தவிர்க்கவும் :

 

உப்பின் பயன்பாட்டை குறைக்க நற்பதமுள்ள காய்கறிகளை வாங்குங்கள். டப்பா வில் அடைத்த காய்கறிகள் கெட்டு போகாமல் இருக்க அதிக உப்பு சேர்க்கப்பட்டி ருக்கும். அதை பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் அவ்வகை உணவுகளை தவிர்க்கவும்.

 

மாமிசத்தில் அதிக கொழுப்புள்ள பாகங்களை நீக்கவும் :

 

கோழியில் அதன் தோலை நீக்கி விடவும், அதே போல் ஆட்டின் இறைச்சியில் உள்ள அதிக கொழுப்புள்ள பாகங்களை நீக்கி விடவும். இது கலோரிகளை குறைத்து, ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும்.

 

எண்ணெய் பயன்பாடு :

 

சூடான சட்டியில் காய்கறிகளின் மீது லேசான அளவு எண்ணெயை தெளித்து விடுங்கள். இதனால் காய்கறிகள் அதிகமான எண்ணெயை உறிஞ்சாமல் இருக்கும் அல்லது முதலில் காய்கறிகளை மைக்ரோ ஓவனில் சமைத்து, பின்னர் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் மட்டும் வதக்கினால் போதுமானது.

 

சாஸ்களின் பயன்பாடு :

 

உணவுகளை அலங்கரிக்க சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாஸ்களையும், சுவையூட்டும் பொருட்களையும் பயன்படுத்துங்கள். அதற்கு காரணம் இவைகளில் அடங்கியுள்ள அதிக அளவு உப்பு.

 

வாட்டும் போது எண்ணெய் அல்லது செயற்கை வெண்ணெயை தவிர்க்கவும் வாட்டும் போது, மசித்த அல்லது தூய்மையான பாலாடை கட்டிகளை எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம். ஆளிவிதை களையும் எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.

 

உப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கவும் :

 

உப்பின் உட்கொள்ளுதலை குறைக்க, உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட பாஸ்தா, நூடுல்ஸ், டப்பாவில் அடைத்த உணவுகள், நீர்ச்சத்தில்லாத பதப்படுத்தப்பட்ட சூப், சிப்ஸ் மற்றும் உப்பு கலந்த நட்ஸ்களை தவிர்க்கவும்.

 

நீரில் கரையும் வைட்டமின்களை இழந்து விடக்கூடாது :

 

நீரில் கரையும் வைட்டமின்களை இழந்து விடாமல் இருப்பதற்கு, காய்கறிகளின் தோலை உரிப்பதற்கு பதில் அழுத்தி தேய்க்க வேண்டும். அதற்கு காரணம் ஊட்டச்சத்துள்ள பொருட்கள் அனைத்தும் தோலுக்கு அருகில் தான் உள்ளது.

 

மேலும் காய்கறிகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைப்பதற்கு பதில், அதனை மைக்ரோ ஓவனில் அல்லது அவிக்க வைத்து சமைக்க வேண்டும். ஒரு வேளை காய்கறிகளை கொதிக்க வைக்க வேண்டுமானால், குறைந்த அளவு நீரை பயன்படுத்துங்கள். மேலும் அதனை அதிக நேரம் கொதிக்க விடாதீர்கள்.

 

மூலிகை மற்றும் கறிமசால் பொருட்களின் பயன்பாடு :

 

சமையலுக்கு தேவையான மூலிகைகளும், இலை செடி கொடிகளையும் பயன்படுத்தி உணவுக்கு சுவை மற்றும் வண்ணத்தை கொடுக்கலாம். மேலும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பைட்டோஓய்ஸ்ட்ரோஜென் இவைகளில் வளமையாக உள்ளது. பல சமயங்களில் உப்பு மற்றும் எண்ணெய்க்கு, சிறந்த மாற்றாக அமையும் மூலிகை மற்றும் கறிமசால் பொருட்கள்.

 

மூலிகையில் உள்ள விசேஷத்தை பயன்படுத்திக்கொள்ளவும் :

 

மூலிகைகளில் உள்ள ஒரு விசேஷ தன்மை என்னவென்றால், அது உணவின் ருசியை அதிகரிக்கும். அதனால் சமைத்து முடிக்கும் நேரத்தில், இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மசாஜ் செய்தவற்கு உகந்த எண்ணெய்கள்!


உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ்.

 

வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இவ்வாறு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்ய பல எண்ணெய்கள் உள்ளன. பெரும்பாலும் அனைவரும் உபயோகிப்பது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான். ஆனால் இவை மட்டுமின்றி, இன்னும் நிறைய எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்ய பயன்படுகின்றன.

 
இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம். சரி, இப்போது உடலுக்கு மசாஜ் செய்ய எந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

 

ஆலிவ் ஆயில்

 

ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், சரும வறட்சி தடைபடுவதோடு, உடல் வலி நன்கு குறையும்.

 

பாதாம் எண்ணெய்

 

அனைத்து வகையான சருமத்திற்கும் சிறந்த எண்ணெய் தான் பாதாம் எண்ணெய். இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், உடல் வலி தணிவதோடு, சரும வறட்சி ஏற்படாமலும் இருக்கும்.

 

கடுகு எண்ணெய்

 

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், களைப்படைந்த தசைகள் நன்கு புத்துணர்ச்சியடைந்து, எலும்புகள் நன்கு வலுப்பெறும்.

 

அவகேடோ எண்ணெய்

 

நறுமண எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், அவகேடோ ஆயில் போன்றவற்றின் மூலம் மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, வறட்சியும் தடைப்படும்.

 

தேங்காய் எண்ணெய்

 

தேங்காய் எண்ணெயால் உடலுக்கு மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைவதோடு, நல்ல ஈரப்பசையுடன் இருக்கும். மேலும் இது தினமும் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்பதால், இதனை தினமும் உடலுக்கு தேய்த்து வந்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

 

விளக்கெண்ணெய்

 

விளக்கெண்ணெய் சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் மிகவும் சிறந்த பலனைத் தரக்கூடியது. நல்ல கெட்டியாக இருக்கும் இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. மேலும் இது முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடும்.

 

ஜிஜோபா ஆயில்

 

இந்த எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் இது பருக்களைப் போக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. எனவே பருக்கள் அதிகம் இருப்பவர்கள், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 

கிரேப் சீட் ஆயில்

 

கிரேப் சீட் எண்ணெயிலும் அழகு நன்மைகள் பல அடங்கியுள்ளன. அதிலும் மென்மையான மற்றும் சுத்தமான சருமம் வேண்டுமென்பவர்கள், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

 

நல்லெண்ணெய்

 

உடலை மசாஜ் செய்ய வேண்டுமென்றால், அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தான் நல்லெண்ணெய். நம் முன்னோர்கள் கூட இந்த எண்ணெய் கொண்டு தான் மசாஜ் செய்தார்கள். இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

 

சூரியகாந்தி எண்ணெய்

 

சூரியகாந்தி எண்ணெயை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இதில் சருமத்திற்கு தேவையான அமிலங்களான லினோலியிக் ஆசிட், பால்மிடிக் ஆசிட் மற்றும் ஸ்டீரிக் ஆசிட் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுபவைகளாகும்.

%d bloggers like this: