ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை


அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள். தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை. கிருஷ்ணா, முகுந்தா… கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம். தர்மன் செய்த தவறு துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். “என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். “பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்”   என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன்  கௌரவர்களை ஜெயித்து இருப்பார். இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது. அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும்,  மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார். பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம்  ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும்,  அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார். தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.  வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல,  அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார். அரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது. “மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை. முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.? கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள். அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன். அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன். “பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி. “ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி. “எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள். முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம். கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர் கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். “எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை. மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். “அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர். குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா? நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு. நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன். பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம். அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
thanks
http://bhakthiplanet.com/2015/08/sri-krishna-jayanthi-festival/

சனிமாற்றம் உங்களுக்கு எப்படி?


பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம்.
ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும்.
உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது.
பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும். சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
மேஷ இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியாக வரும் அவர், இனி உங்கள் கஷ்டங்களை போக்க போகிறார். “அஷ்டம சனி வந்தால் அவஸ்தை” என்று பலர் கூறுவார்கள். ஆனால் என்னை பொருத்தவரையில் அவர் (சனி) குருவின் பலத்தால், அதாவது விசாக நட்சத்திரத்தில் வரப்போவதால், அஷ்டமசனியின் பாதிப்பு வராது. இராசிக்கு 09-12-க்குரியவனின் ஆதிக்கத்தில் வருவதால், விரயங்கள் தீரும்.
கடன் குறையும். பாக்கியம் சேரும். உழைப்பு அதிகம் இருக்கும். யாத்திரை-தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடக்கும். சனி 2-ம் இடம், 5-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்வதால், பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. வீண் செலவுகளை நீங்கள்தான் திட்டமிட்டு குறைக்க வேண்டும். பூர்வீக சொத்தில் சில பிரச்னைகள் வந்தாலும் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் தேவை.
தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். வழக்கு தொல்லை விடுதலை ஆகும். வீடு, மனை, வாகனம் அமையும். அரசாங்க ஆதரவு கிட்டும். சொந்த தொழில் துவங்க வாய்ப்பும் அமையும். பொதுவாக, அஷ்டம சனி ஆட்டி படைக்காது கவலை வேண்டாம்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி அன்றோ அல்லது உங்களின் பிறந்தநாள் அன்றோ நீல வர்ண வஸ்திரத்தை ஒருவருக்காவது தானம் செய்யுங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
ரிஷப இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு, 7-ம் இடத்திற்கு அதாவது சப்தம ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பொதுவாக சப்தம ஸ்தானம், ரிஷப இராசிக்கு யோக ஸ்தானம். 10-க்குரிய சனி, 7-ல் வருவது எதிர்பாரா யோகத்தை தரும். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி பகவான் யோகத்தையே செய்யும், கெடுதல் செய்யாது.
இராசிக்கு 8-11-க்குரியவன் ஆதிக்கத்தில் வருவதால் திருமணம், எதிர்பாரா ஐஸ்வரியம், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் கணிசமான அளவு பண வரவை கொடுக்கும். கூட்டாளிகளால் நன்மை, லாபம் உண்டு. ஜென்மத்தை, பாக்கிய ஸ்தானத்தை, சுகஸ்தானத்தை அதாவது உங்கள் இராசியையும், 9-ம் இடம், 4-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை.
கல்வித்துறையில் கவனம் தேவை. பிரயாணம் செய்யும்போது நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் தீரும். மேல்படிப்பு தொடர வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வரும். புதிய நண்பர்களின் உதவியால் தொழில் துவங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். பொதுவாக சப்தம சனி வெற்றியை கொடுக்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமை அன்றோ அல்லது உங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் கருப்பு அல்லது நீல வர்ணத்தில் ஆடை அணிய வேண்டும். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
மிதுன இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு வருகிறார். பொதுவாக இராசிக்கு 3,6,11-ல் சனி அமர்ந்தால் இராஜயோகம்தான். இது ஜோதிட விதி. 7-10-க்குரிய குருவின் ஆதிக்கத்தில் வருவதால், தொழில்துறையில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பாரா கூட்டாளியின் உதவி கிடைக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகமும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் வரலாம்.
8-க்குரியவன், 6-ம் இடத்தில் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி கொடுக்கும். விரோதங்கள் மறையும். உடல்நலம் பெறும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். 8-ம் இடத்தை, 12-ம் இடத்தை, 3-ம் இடத்தை பார்வை செய்வதால், வீண் பிரச்னைகள் வரத்தான் செய்யும். மரத்தில் பழம் இருந்தால் கல் எறியத்தான் செய்வார்கள். நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.
தேவையற்ற விரயங்கள் செய்யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம். மேல்அதிகாரி வசம் பணிவு தேவை. சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். நினைத்த காரியத்தை நடத்தி தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
விநாயகப்பெருமானை வணங்குங்கள். சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதமோ அல்லது புளியோதரை சாதமோ தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கடக இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் அமரப்போகிறார். 6-9-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், இத்தனை மாதங்களாக செய்த சோதனை போதும், இனி இவர்கள் சாதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து சனி பகவான் நன்மைகளை செய்யப்போகிறார்.
வெளிநாட்டு வியபாரம், வெளிநாட்டு பயணம், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகியவற்றை செய்து வைப்பார். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு-மனை வாங்கும் காலமிது. உயர்கல்வி வரும். தடைப்பட்ட தொழில் துவங்கும். நோய்நொடி நீங்கும். பொதுவாக, பஞ்சம சனி நன்மைகளை செய்வார்.
2-ம் இடம், 7-ம் இடம், 11-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள் கூட்டாளி வசம் கவனம் தேவை. வழக்கு விஷயத்தில் எதிராளியிடம் சுமுகமாக பேசி சாதகமாக்கி கொள்ளுங்கள். தூர பயணம் செய்யும்போது, உடல்நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் ஆலோசனையை பொறுமையாக கேளுங்கள். பெற்றோர் உதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவில் காரியங்கள் நன்மையாக முடியும். சனிபகவான் சாதகமாக வழி நடத்துவார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமையில் வாசனை மலர்களை பெருமாளுக்கு அணிவித்து வணங்குங்கள். நெய்தீபம் ஏற்றுங்கள். புளிச் சாதம் தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
சிம்ம இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் வந்து அமரப்போகிறார். பொதுவாக 4-ம் இடத்தில் சனி அமர்ந்தால், “அர்தாஷ்டம சனி” என்பார்கள். அர்தாஷ்டம சனி நன்மை செய்யாது என்றும் கூறுவார்கள். அது உங்கள் இராசியை பொறுத்தவரையில் இந்த நேரத்தில் அவ்வளவு உண்மையில்லை.
காரணம், 5-8-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம சனியாக இருந்தாலும், ஆனந்தத்தை அள்ளி கொடுக்க போகிறார். ஆம். பஞ்சமாதிபதி காலில் வருவதால், கஷ்டங்கள் கடலில் கரைந்தது போல் ஆகும். தொட்டது துலங்கும். பகைவர்கள் அடங்கி விடுவார்கள். கடன், நொய்நொடி அறவே தீரும்.
பழைய வீடு, புதியதாய் பொலிவு பெரும். கல்விதடை நீங்கும். உத்தியோகம், சொந்ததொழில் அமையச்செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. ஜென்மத்தையும், 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், தேவையற்ற கடன் வேண்டாம். யாரிடத்திலும் விரோதம் வளர்க்க வேண்டாம். அகலகால் வைத்து ஆடம்பர செலவு செய்ய வேண்டாம். சுகஸ்தான சனி சுகமான வாழ்வை தருவார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். சனிக்கிழமையில் நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கன்னி இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகிறார். 4-7-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வெகு பிரமாதமாக வரப்போகிறார். அன்றுடன் “ஏழரை சனி” விடுதலை ஆகிறது. கூண்டு பறவை போல் சிக்கி இருந்த நீங்கள், இனி சுதந்திரமாக இருப்பீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் வருவதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும். திருமண தடை நீங்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் பெருக வாய்ப்பு வரும். குடும்ப சச்சரவு தீரும். தடைபட்ட கட்டடவேலை இனி துவங்கும். 5-ம் இடம், 9-ம் இடம், 12-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், பூர்வீக சொத்தில் வழக்கு பிரச்னை வரலாம். சொத்து வாங்கும் பொழுது முழு கவனம் தேவை.
ஜாமீன் விஷயமாக இருந்தால் தவிர்க்கவும். பெரியவர்களிடம் அடங்கி போவது நன்மை தரும். அவர்கள் வசம் தர்க்கம் செய்ய வேண்டாம். மனைவியால் யோகம் உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். அயல்நாட்டு வியபாரத்தில் அதிக லாபம் கிட்டும். கீர்த்தி சனி, வசந்த காற்று வீசச் செய்வார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வஇலையை சமர்பித்து வணங்குங்கள். அதேபோல சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிஇலையை சமர்பிக்கவும். ஊனமுற்ற முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் வஸ்திரம் அணிவியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
துலா இராசி அன்பர்களே
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி வருகிறார். ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் கவலை வேண்டாம். 3-6-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போவதாலும், 2-ம் இடத்து சனியை கடகத்தில் இருக்கும் குரு பார்வை செய்வதாலும், பாதகம் அவ்வளவாக இருக்காது.
4-5-க்குரிய, அதாவது சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி சனி நன்மையே செய்வார். பூர்வீக சொத்தில் வழக்கு இருந்தால் தீர்வு கிடைக்கும். கல்வி தடை நீங்கும். மேலதிகாரி உதவி கிடைக்கும். அரசாங்க உதவியும் கிடைக்கும். வங்கி உதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவில் நன்மை தேடி வரும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். குடும்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும்.
4-ம் இடம், 8-ம் இடம், 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வாகன பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது, பேச்சில் கவனம் தேவை. லாபம் வருகிறது என்று வாரி,வாரி செலவு செய்யக்கூடாது. தேவையில்லா செலவால் மற்றவர்களிடம் கடன் கேட்கும் சூழ்நிலை உண்டாக்கி விடும். கவனமாக செயல்பட்டால், முன்னேற்றத்தை தருவார் தன ஸ்தான சனி.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
நல்லெண்ணை தானம் செய்யுங்கள். இரும்பு பொருட்களை தானம் செய்யுங்கள். இல்லத்தில் நல்லெண்ணையுடன் நெய் சேர்த்து தீபம் ஏற்றி மனதால் சனிஸ்வர பகவானை வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! விருச்சிக இராசி அன்பர்களே – 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அமரப் போகிறார். “ஐயோ.. ஜென்ம சனியா?” என்று பயப்பட வேண்டாம்.
2-5-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி அமர்கிறார். ஆகவே திருமணம், குழந்தைபேறு என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். சிலர் உத்தியோகம் விட்டு, சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். எதிர்பாரா தனலாபம் கிட்டும். கூட்டாளிகளால் தொழில் ஆதாயம் வரும். சிலருக்கு உறவினர்களால் நன்மை உண்டாகும். பட்டப்படிப்பு தொடரும்.
பட்ட கஷ்டம் தீரும். தொழில் துவங்குவதற்கு சொத்தை அடமானம் வைக்க நேரும். 3-ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடங்களை சனிப் பார்வை செய்வதால், தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கும் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வசம் நிதான பேச்சு அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்ந்து, சொத்துக்கள் கைக்கு வரும். நோய்நொடி தீரும். ஜென்ம சனி மென்மையான வாழ்வு தரும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெண்ணை சாத்தி வணங்குங்கள். காக்கைக்கு சனிக்கிழமைதோறும் எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
தனுசு இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். “ஏழரை சனி பிடித்தது” என்று பயம் வேண்டாம். ஜென்ம-சுகாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால், ஏழரை சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால் யோகம் உண்டு.
திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தீரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தொழில் துவங்க வழி பிறக்கும். 2-ம் இடம், 6-ம் இடம், 9-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், கண்களில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு கவனிக்கலாம் என்ற எண்ணம் வேண்டாம். சிறு துளி பெரும் வெள்ளம் என்பதுபோல் சிறுசிறு கடன்தான் பெரிய பாதகத்தை கொடுக்கும். பெற்றோர், பெரியோர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அதனால் நன்மை உண்டாகும், திருப்பம் தரும். ஏழரை சனியின் துவக்கமான 12-ம் இட சனி என்று கவலை வேண்டாம்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிகிழமையில் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள். தயிர் சாதத்தை 8 பேருக்காவது கொடுங்கள். நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
மகர இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் லாப சனியாக வருகிறார். 12-3-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போகிறார். பொதுவாக 3-6-11-ல் சனி அமர்ந்தாலே இராஜயோகம்தான். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும். வரன்கள் தேடி வரும்.
வீடு, மனை வாகனம் அமையும். செல்வந்தர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிவினை-சச்சரவு தீரும். ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கரை தேவை.
சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும். ஆடம்பர செலவு குறையுங்கள். நசிந்த தொழில், மீண்டும் புத்துணர்வு பெற வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு அமையும். லாப சனி யோக சனியே.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
ஆஞ்சனேயரை வணங்குங்கள். நீலம் அல்லது கருப்பு வஸ்திரத்தை சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அணிவித்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கும்ப இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். தன-லாபாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி வரப்போவதால், ஒரு தொழிலுக்கு இரண்டு தொழிலாக உயர வாய்ப்பு வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். இதுநாள்வரையில் உங்களை புண்படுத்தியவர்கள் புகழ ஆரம்பிப்பார்கள். இனி என்ன செய்வது? என்று குழப்பத்தில் தவித்த நீங்கள், திட்டமிட்ட வாழ்க்கை வாழ ஆரம்பிப்பீர்கள்.
உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் பண இறுக்கம் நீங்கும். தன, தான்யத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளது. பொதுவாக, பொன்னான நேரமிது. சனி பகவான், 12-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடங்களை பார்வை செய்வதால், இனி திட்டமிட்டு வாழுங்கள். கூட்டாளி வசம், குடும்பத்தார் வசமும் அடங்கி போக வேண்டும் என்றில்லை, ஆனால் அனுசரித்து செல்வது நல்லது.
ஜாமீன் விஷயத்தை தவிர்த்து விடுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சகோதர ஒற்றுமை வளரும். உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். கடன் சுமை தீரும். 10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சிவபெருமானையும், பெருமாளையும் வணங்குங்கள். ஈசனுக்கு வில்லஇலையும், பெருமாளுக்கு துளசி இலையும் சமர்பித்து வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
மீன இராசி அன்பர்களே – 
02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். இனி முடங்கி கொண்டு இருந்த நீங்கள், சுறுசுறுப்புடன் வீர நடை போடுவீர்கள். மனதில் பட்டதை துணிந்து செய்வீர்கள். இதுவரை இருந்த பயம் பஞ்சு போல் பறந்து விடும். குடும்பத்தில் குதுகலம்தான். பிள்ளைகளுக்கு திருமணம், சுபசெலவுகள் ஏற்படும்.
9-ம் இட சனி, உறவினர் வருகையை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வெகு ஜோராய் அமையும். வேலை இல்லா திண்டாட்டம் தீரும். வேலையில்லா பட்டதாரிகள், வி.ஐ.பி. ஆவார்கள். பொன், பொருள் சேரும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. 3-ம் இடம், 6-ம் இடம், 11-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், வீண் விவாதம் வரும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமல் விடுங்கள்.
வாதம் செய்ய வேண்டாம். விட்டு கொடுத்தவன் கெட்டதாக சரித்திரம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள். மனநிம்மதி உண்டாகும். சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கியத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் வாரி கொடுப்பார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குங்கள். புளிசாதத்தை மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது தானம் கொடுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். நல்வாழ்த்துக்கள்!

இதன் அழகில் மயங்காதவர்களா நீங்கள்! கண்டிப்பா இருக்க முடியாது


ஜெய்ப்பூர் சுற்றுலா சென்றாலே அதனை நாம் ராஜ சுற்றுலா என்று தான் சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.

ஜெய்ப்பூரின் பளிச்சிடும் சுற்றுலா இடங்கள்

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து போகிறார்கள்.

1729 ஆம் ஆண்டு தொடங்கி 1732 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அரண்மனை பல்வேறு கட்டிடங்களை கொண்டு ஜொலிக்கிறது. மொகலாய, ராஜஸ்தானி கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட அரண்மனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர்மந்தர்

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் ‘ஜந்தர்மந்தர்’ என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.

இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.

வானவியல் கருவிகள் இங்குள்ளன. ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் ‘யந்த்ரா மந்த்ரா’. இதில் ‘யந்த்ரா’ என்றால் கருவிகள், ‘மந்ந்ரா’ என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும்.

இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.

யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்டா கோவில்

ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த கல்டா கோவில் ஒரு வைணவத் தளமாகும். கல்வா என்னும் துறவி இங்கு பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ராஜஸ்தானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புரதான சின்னங்களுள் ஒன்றாகவே காட்சி அளிக்கிறது.

ஆமர் கோட்டை

ஜெய்ப்பூரிலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆமர் கோட்டை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. ராஜபுத்திர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குகிறது.

பளபளக்கும் சிவப்பு கற்களின் உதிவியோடு, பளிங்கு கற்களை சேர்த்து நேர்த்தியாக அமைந்துள்ள இந்த கோட்டை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறையினுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டையை ஒட்டியே அமைந்துள்ள அரண்மனையும் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனைக்கு முன்னர் இந்த இடத்தில் தான் மன்னர்கள் வசித்து வந்தனர்.

நஹர்கர் கோட்டை

இதுவும் ஒரு வித்தியாசமான கோட்டை. 1734 ல் கட்டப்பட்ட இந்த கோட்டை ஜெய்ப்பூரின் அரணாக விளங்கியது. இன்று ஜெய்ப்பூரின் அடையாள சின்னமாக விளங்குகிறது.

மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், ஜெயப்பூரின் அழகிய காட்சியையும் காண மக்கள் வெள்ளம் இங்கு கூடுகிறது. மேலும் கண்களின் பார்வைக்கு வித்தியாசத்தையும், செவிக்கு வரலாற்றையும் இது தரும் என்பதில் மாற்றமில்லை.

நவராத்திரி விரதம்


புரட்டாசி மாதம் சக்லபக்ஷப் பிரதமை முதல் நவமியீராகவரும் ஒன்பது தினங்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது. அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதனம வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும். பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்மாகும்.

முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக்கொள்ளலாம்.

வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொழுமண்டபத்தை அமைத்து அங்கு பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும். சந்திர குப்பத்தை தனியாக வைக்காமல் சக்தி கும்பத்தை மண்குடத்தில் வைத்து சுற்றிவர மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்பவளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.

வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக் கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

விஜய தசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்த பின்நாட்படிப்பு நாட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வது முறையாகும்.

புயலுக்கு முன்னும் பின்னும் தனுஸ்கோடி


னுஷ்கோடி இந்த பெயரும் பெயர்சார்ந்த இடமும் மீது எப்போது ஏன்எதற்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்றுதெரியவில்லை. சற்றே அமானுஷ்யம்பரவிய மணற்பரப்பு, ஓயாமல்அடித்துக் கொண்டு இருக்கும் கடல்காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக்கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும்இந்தியப் பெருங்கடலையும்தனக்கான எல்லைகளாகவரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்துபோன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி. தனுஷ்கோடி சென்று வந்தகதையை பயணக் கட்டுரையாக மட்டும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் வரலாறுக்குள் புதைந்து எஞ்சியிருக்கும் மணல்பரப்பும், மிஞ்சிஇருக்கும் மக்களும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டனர். 

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி மீதான தேடல் தொடங்கிய நிமிடம் முதல்இந்த நிமிடம் வரை தனுஷ்கோடி பற்றி கிடைத்து வரும் தகவல்கள் அனைத்தும்சற்றே பிரமிப்பாயும் திகில் கலந்தும் உள்ளது. பயணத்தில் சந்தித்ததனுஷ்கோடி மக்கள் மூலம் கிடைத்த தவல்களும், இணையத்தில் தனுஷ்கோடிபற்றிய தேடல் மூலம் கிடைத்த தகவல்களுமாக இணைந்து இந்த பதிவுமுழுவடிவம் பெறுகிறது. இதற்கு முன் நான் எழுதிய எந்த ஒரு பதிவிற்கும்இவ்வளவு தேடல் மேற்கொண்டது இல்லை அவை எல்லாமே அனுபவப்பதிவுகளாக மட்டுமே இருக்கும், முதல் முறை சற்றே சிரத்தை எடுத்துதகவல்கள் சேகரித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். அதற்கு முழு காரணமும்தனுஷ்கோடி தான்.

னுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடிய பொழுது பல தகவல்கள் கிடைத்ததுஇருந்தும் நான் தேடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை,ஆங்காங்கு கிடைத்த தகவல்களை மொத்தமாக ஒரே இடத்திலதொகுத்துள்ளேன். இருந்தும் நூறு சதவீதம் முழுமையான தகவல்கள் அடங்கியபதிவாக இருக்காது. இந்தப் பதிவை படிக்கும் உங்களிடம் நான் வைக்கும்வேண்டுகோள் இரண்டு, எங்கேனும் தவறு செய்திருந்தால் திருந்துங்கள்,காரணம் வரலாற்றைப் பிழையாக்கி விடக்கூடாது, ஏதேனும் தகவல்விடுபட்டிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், தொடர்புள்ள சுட்டிகொடுங்கள், பதிவுடன் இணைத்துக் கொள்கிறேன்.

குறைந்த கால இடைவெளிக்குள் இரண்டு முறை தனுஷ்கோடி சென்றுவருவேன் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று மாதங்களுக்குமுன்பு நண்பர்களுடன் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்று வந்த பயணக் கதைஎங்கள் குடும்பத்தாருக்கு ஆர்வத்தை அத்துமீறி கிளப்பி இருக்க வேண்டும்.அதனால் நாள் தான் என்னவோ முதல் நாள் இரவு ஆலோசித்து அடுத்த நாள்பயணித்தும் விட்டோம். இம்முறை தென்காசியில் இருந்து ராமேஸ்வரம்நோக்கி பயணித்தோம். ஆறுமணி நேரப் பயணம், ராமேஸ்வரம் தீர்த்தங்களில்நீராடிவிட்டு தனுஷ்கோடி நோக்கிய பயணம் தொடங்கியது.

ன்னிலை விளக்கம் சற்றே நீண்டமைக்குப் பொறுத்தருள்க. தாமதியாமல்நாடோடி எக்ஸ்பிரஸினுள் ஏறிக்கொள்ளுங்கள், தனுஷ்கோடி நோக்கிய நமதுபயணத்தை, வரலாற்றுத் தேடலைத் தொடங்குவோம்.

நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும்நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சிலநாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப்பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப்பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக்கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும்சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள்கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும்,துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர்.

டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்தகாற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம்கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போதுவேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடாமற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன.காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததுதுரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமானபகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும்தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாகநெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கிநகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் முன் தனுஷ்கோடியைப் பற்றியவரலாற்றுப் பார்வை ஒன்றைப் பார்த்து விடுவோம்.

னுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னைதூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது.பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டுகொண்டிருந்த 18 – 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம்வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது.

1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரேபோன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில்(1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின்என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில்இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்துநடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடிசென்று வந்து கொண்டிருந்தன.

சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடிவரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL) என்றுஅழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும்இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால்சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம். 

சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம்,தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால்அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில்இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும்கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலானஇந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம்நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள்மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

ந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்தரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்தரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும்போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்துகொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும்முடிவுக்கு வந்தது.

னுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொருநம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவுசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்துதனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும்பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில்இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில்பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும்பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது.சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக்காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டுமூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு.

தற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில்பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும்குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு.

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்றுபார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமேசொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை.தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும்வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம்.மிகப்பெரிய யில் நிலையம், பால் நிலையம், ந்தி ஆபீஸ், ஸ்டம்ஸ் ஆபீஸ்,மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்றுபரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்புஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில்இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள்போக்குவரத்தும் அதிகம்.
புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கியநேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத்தொடங்கியது, எதிர்கொள்ளப் போகும் ஒரு அபாயத்தை எதிர்பாராமல்…………………………

டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றையதினம் தொடக்கம் முதலே  வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும்அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்குஎப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும்தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம்கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக்கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பதுதெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம்அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்குஇருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடிவரை செல்லும் தனுஷ்கோடி – பாம்பன்பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடிநோக்கிய தனது(இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறுமீட்டர்களுக்கு முன்,  காற்றின் வேகம் தீவிரம்அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கிஇருந்தது. இஞ்சின்டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கிஇருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன.ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்தமழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத்தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

ங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்தவிசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்தநொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்றுஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள்.  ஆழிப் பெருங்காற்றும் அதைத்தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில்பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும்ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம்நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால்அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும்மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால்தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன்அழைத்துக் கொண்டது.

னுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரேஇருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத்தொடங்கின  அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும்அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூடஅங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடிஉயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில்ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

ருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும்,அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்ததண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தைஎடுத்தியம்பத் தொடங்கின. இயற்கைகொடுந்த இந்த அபாய அறிவிப்பைஉணர்ந்து கொண்டவர்கள்வேகமாக செயல்படத்தொடங்கினார்கள். அங்குகுடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள்மீனவர்கள் என்பதால் குழந்தைகள்பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பானஇடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில்நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும்தனியொரு ஆளாக பல உயிர்களைக்காப்பாற்றி இருக்கிறார்.

டைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்தமணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி  இல்லைஉயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிரஇன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.

ரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில்சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள்உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள்கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது.

ர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது.தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள்உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள்பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள்அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடிதன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்திஅடங்கியது.

வை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின்நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்தநாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப்போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள்.மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும்தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது,தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்ததனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது.குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம்விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாகசெயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப்புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத்தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்றுஅறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கிவிரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள்மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல்படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

டுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தகாரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களைவிட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை “சாரதா” என்னும் கப்பல்பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்தமக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில்அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது,ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது.இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்கவேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின்பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும்கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்தமுதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்ததுஎன்று குறிப்பிடுகிறார்.

னுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது.இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத்தொடங்கியது.

மீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலிவாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள்குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம்.தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல்,தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானாநிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்றுமுழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன,தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.

சியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ  புயலில்சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது………………..

ராமேஸ்வரமும் மற்ற பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், தனுஷ்கோடி முழுவதுமாய்அழிந்திருந்தது. இந்நேரத்தில் பத்திரிகைகள் வேறுவிதமான ஒரு பீதியைக்கிளப்பின, “தனுஷ்கோடி புயலில் சிக்கிய ஜெமினி கணேசனும் அவரது மனைவிசாவித்திரியும் மாயம்”. தமிழகமெங்கும் இந்த செய்தி இன்னும் பரவலாகப்பேசப்பட்டது. தங்களுக்கு எதுவும் ஆகவில்லை தாங்கள் நலமாக இருப்பதாகஊடகங்களின் வாயிலாக தகவல் அறியப்பட்டதுமே தமிழகம் அந்தப் பீதியில்இருந்து தெளிந்தது. இருந்தும் புயலின் தாக்கம் பற்றி இவர்கள் கூறியகருத்துக்கள் தனுஷ்கோடி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன.

டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனிதநீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின்வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.அன்றைய இரவுப் பொழுதை தனுஷ்கோடியில் வேண்டும் என்பதுசாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்தஎச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவேஅன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.
னுஷ்கோடிக்கு முன்பே புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது.தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது.தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள் தனுஷ்கோடி கரையில் உடலாகஒதுங்கத் தொடங்கியிருந்தது.

புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

“ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாமகேட்டுதே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழைஎல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்தமாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவேமுடியல.”

“அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கிஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசாதெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க.அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது.” தங்கள் பேட்டியில் ஒருவிதமிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.

ராமேஸ்வரம் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை தங்களுக்காக பாம்பன் வரைமுடியுமா என்று கேட்டுள்ளனர். இருந்த நிலகரிகள் அனைத்தும் புயல்மழையோடு சென்று விட்டதால் எரிபொருள் இல்லை என்று கூறி கையைவிரித்துவிட்டனர் . அதன்பின் பேரிழப்பைப் பார்வையிட வந்த முதல்வரைசந்தித்து ஜெமினி தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அவரும் உதவிசெய்வதாக கூறியுள்ளார். பின்பு ஒருவழியாக அவர்கள் பாம்பன் வந்துஅங்கிருந்து மோட்டார் படகு மூலம் ராமநாதபுரம் வந்து பின் மதுரையிலிருந்துவிமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராமஸ்வரத்தில் இருந்துபுறப்படுவதற்கு முன் தங்கள் கையிலிருந்த ஆயிரம் ரூபாயையும் அங்கிருந்தமக்களுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் வந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியைப்பார்ப்பதற்கு வந்திருந்த தனுஷ்கோடி மக்கள் புயலில் இருந்து தப்பித்துள்ளனர்என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அப்படித் தப்பித்தவர்களில்ஒருவர் கூறுகிறார் ” அன்னிக்கு மட்டும் நான் ராமேஸ்வரம் போகாமஇருந்திருந்தா என் பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்தி இருப்பேன், இல்லஅதுங்களோட சேர்ந்து ஒரேடியாப் போயிருப்பேன்” தன்னைச் சந்திக்கும்பலரிடமும் இந்த வார்த்தைகளையே கூறிக் கொண்டுள்ளார்.

ன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரைகிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும்ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும்பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால்அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

க்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள்வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனைஅடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்ததுதனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி,மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனதுஅன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத்தள்ளப்பட்டது.

னுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரைஅடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின்மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு……….

மூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில்பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால்நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இதுபோன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறைதனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர்ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமானவிசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில்அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின்ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார்.நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச்சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும்.அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒருவிஷயம் சொன்னான்.

ப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துலஇந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்குரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம்கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்”.

ந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும்  நம்பி விடவில்லை. இந்தமுறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன்வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத்தான் நினைத்திருப்பேன்.

மூன்று மாதத்திற்கு முன் சென்றபொழுது  தனுஷ்கோடி செல்லும்வழியெல்லாம் மணல் நிரம்பிய அழகான கடற்கரையைத் தான் காணமுடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால்படத்தில் “கன்னத்தில் முத்தமிட்டால்”பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவுஅழகாகக் காட்டியிருப்பர்களோஅத்துணை அழகாக இருந்தது. ஆனால் இம்முறை செல்லும் பொழுதோதலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல்காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியைவித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும்முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால்அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான்தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கானஅறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன்வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது.செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும்,இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப்பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும்வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயேதனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான்தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்றுமாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள்ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இருகடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறைதனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குகிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிடவேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடிசெல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள்சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன்அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறுருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்குஎன்று  தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபதுநபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல்ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள்.தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள்குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக்கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால்போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும்ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.

டெம்போ நிரம்பி வழிய,  சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்துபேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில்பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால்மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும்பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும்வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியேடெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதேநிமிடம் சுவாரசியமான சற்றே திகில்நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.

டற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டுஇருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்தஇந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக்கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்(!) இருந்து என் புலன் விசாரணைதொடங்கியது.

ந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும்  இந்தியப்பெருங்கடலானது  ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடாஅமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுதுஅகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டுஇருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம்சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இதுபோன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்லமுடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்குசென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).

மூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்டமுக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம்அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டிஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாகஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்துஉருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மைகவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம்வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின்நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியைஅரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றிவளைத்து  தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்லவேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.

பெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள்அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன,எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயேசக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போபயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில்துளியும் சந்தேகம் இல்லை.

னுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின்மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது,கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனைகுலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவவிடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தைகீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவைஅழகாக வெட்டி ஒட்டி கொடுத்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

னுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு  இது போன்ற டெம்போக்களும் வேன்களும்மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய்வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள்வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது.தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம்ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்குபடிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார்,வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை,பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால்ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால்கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொருகொடுமையான விஷயம்.

னுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது,எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப்போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும்ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மைஇறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின்மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமேநம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.

யில் நிலையத்தின் மிக அருகில்புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒருமுனீஸ்வரன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம்பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். எந்தக்காலத்திலோ தினமணி பேப்பர்தனுஷ்கோடி பற்றி அச்சிட்டசெய்திகளை இன்றும்மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழையகதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார்,தன்னிடம் இருக்கும்  நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்குபின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார்,அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக்குறிபிடுகிறார்.  புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள்காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.

க்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில்இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின்இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான்கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்குவெளிச்சம் தருகின்றன. “ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்டபாக்க முடியும்” என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம்ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பதுஇல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

டிப்படை வசதி என்றுஎதுவும் கிடையாது, கடற்கரைமணலில் சில அடி ஆழத்தில் நன்னீர்ஊற்றுகள் இருக்கின்றன, இந்தநீரூற்றுக்கள் தான் இவர்களது நீர்ஆதாரம். சமையல் பொருட்கள்அனைத்தையும் ராமேஸ்வரத்தில்இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்குஇருப்பவர்கள் அனைவரும்காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில்போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்புநடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம்இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்துமக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூடதனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கிஇதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால்தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள்வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில்துளியும் சந்தேகம் இல்லை.

மூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில்பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால்நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இதுபோன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறைதனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர்ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமானவிசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில்அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின்ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார்.நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச்சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும்.அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒருவிஷயம் சொன்னான்.

ப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துலஇந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்குரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம்கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்”.

ந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும்  நம்பி விடவில்லை. இந்தமுறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன்வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத்தான் நினைத்திருப்பேன்.

மூன்று மாதத்திற்கு முன் சென்றபொழுது  தனுஷ்கோடி செல்லும்வழியெல்லாம் மணல் நிரம்பிய அழகான கடற்கரையைத் தான் காணமுடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால்படத்தில் “கன்னத்தில் முத்தமிட்டால்”பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவுஅழகாகக் காட்டியிருப்பர்களோஅத்துணை அழகாக இருந்தது. ஆனால் இம்முறை செல்லும் பொழுதோதலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல்காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியைவித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும்முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால்அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான்தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கானஅறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன்வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது.செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும்,இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப்பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும்வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயேதனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான்தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்றுமாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள்ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இருகடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறைதனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குகிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிடவேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடிசெல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள்சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன்அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறுருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்குஎன்று  தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபதுநபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல்ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள்.தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள்குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக்கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால்போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும்ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.

டெம்போ நிரம்பி வழிய,  சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்துபேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில்பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால்மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும்பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும்வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியேடெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதேநிமிடம் சுவாரசியமான சற்றே திகில்நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.

டற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டுஇருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்தஇந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக்கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்(!) இருந்து என் புலன் விசாரணைதொடங்கியது.

ந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும்  இந்தியப்பெருங்கடலானது  ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடாஅமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுதுஅகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டுஇருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம்சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இதுபோன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்லமுடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்குசென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).

மூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்டமுக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம்அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டிஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாகஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்துஉருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மைகவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம்வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின்நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியைஅரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றிவளைத்து  தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்லவேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.

பெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள்அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன,எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயேசக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போபயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில்துளியும் சந்தேகம் இல்லை.

னுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின்மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது,கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனைகுலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவவிடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தைகீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவைஅழகாக வெட்டி ஒட்டி கொடுத்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

னுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு  இது போன்ற டெம்போக்களும் வேன்களும்மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய்வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள்வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது.தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம்ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்குபடிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார்,வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை,பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால்ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால்கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொருகொடுமையான விஷயம்.

னுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது,எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப்போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும்ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மைஇறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின்மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமேநம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.

யில் நிலையத்தின் மிக அருகில்புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒருமுனீஸ்வரன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம்பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். எந்தக்காலத்திலோ தினமணி பேப்பர்தனுஷ்கோடி பற்றி அச்சிட்டசெய்திகளை இன்றும்மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழையகதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார்,தன்னிடம் இருக்கும்  நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்குபின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார்,அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக்குறிபிடுகிறார்.  புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள்காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.

க்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில்இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின்இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான்கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்குவெளிச்சம் தருகின்றன. “ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்டபாக்க முடியும்” என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம்ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பதுஇல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

டிப்படை வசதி என்றுஎதுவும் கிடையாது, கடற்கரைமணலில் சில அடி ஆழத்தில் நன்னீர்ஊற்றுகள் இருக்கின்றன, இந்தநீரூற்றுக்கள் தான் இவர்களது நீர்ஆதாரம். சமையல் பொருட்கள்அனைத்தையும் ராமேஸ்வரத்தில்இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்குஇருப்பவர்கள் அனைவரும்காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில்போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்புநடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம்இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்துமக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூடதனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கிஇதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால்தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள்வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில்துளியும் சந்தேகம் இல்லை.

fisherfolk%20dhanushkodi.jpg

 

தனுஷ்கோடி மீனவர் சமுதாயம்

 

 

 

RameshwaramDhanushkodi4.JPG

 

குறுகிய நிலபரப்பில் தனுஷ்கோடி நோக்கி …

 

 

 

 

RameshwaramDhanushkodi2.JPG

 

கடல் அரிப்புகளினூடாக பயணம்

 

தமிழகத்தில் கோடி தமிழர்கள் இருந்தும் என்ன செய்தோம்? – ஒரு சூடான உண்மை தகவல்


என் நண்பர் ஒருவர் வெளி நாட்டில் இருக்கிறார்.அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார். அதை கேட்டு நான் திகைத்து போனேன்.

Tnmapஅவர் சொன்னார்? நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன்நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுறிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழி தானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா என்று கேட்டான் .நான் ஆச்சரியத்தோடு ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. ஈழத்தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேக்கிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிறார்கள். அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. அவர்கள் குருதி சிந்தி நடத்திய அந்த வீரம் செறிந்த போராட்டம் தான் உலகத்துக்கே தமிழனை அடையாளம் காட்டியுள்ளது என்பதையும் நாம் மறக்க கூடாது…

இன்றும்  அந்த ஈழ தமிழ் மக்களின் பேசுமொழி இனிய தூய தமிழாக இருப்பது வியப்புக்குரியது.. நாம் பேசும் வார்த்தை வேறு…. பன்னாட்டு மொழி கலந்திருக்கும் அனால் எழுதும் மொழி வேறு எனவே தூய தமிழில் எழுதுவதற்கு நாம் கடினப்படுகிறோம். அனால் ஈழ தமிழர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினாலும் பன்மொழி தேர்ச்சி இருப்பினும் அவர்கள் தமிழில் முடிந்தவரை பிற மொழி கலக்காதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். வெளிநாட்டவர்களுடன் நாம் கதைக்கும் போது ஆங்கிலத்தில் தமிழ் கலக்காதவாறு கடினப்பட்டு கதைத்தாலும் எம் மொழியில் தாராளமாக பிற மொழியை கலப்பது எந்த வகையில் நியாயம்?

ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் கூறியது போல ” தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்பவர்களை பார்ப்பதற்கு ஈழ நாட்டிற்கு செல்ல வேண்டும்”  என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.