மாணவிகள் முந்துவதும் மாணவர்கள் பிந்துவதும் ஏன்?


சென்னை: சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவிகளின் தேர்ச்சியை விட குறைந்தே காணப்படுகிறது. ரேங்க் பட்டியலிலும் இதே நிலை. இது ஏன் என பெற்றோர் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.இரண்டு தசாப்தத்துக்கு முன், பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவர்களின் கையே ஓங்கி இருந்தது. தேர்ச்சி சதவீதத்திலும் ரேங்கிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றனர். காலம் மாறியது; கோலமும் மாறியது.

“பைய, பைய’ பையன்களின் கவனம் சிதறத் துவங்கியது. மதிப்பெண்களும் வீழத் துவங்கின. மாணவிகளின் தேர்ச்சி சதவீதமும், ரேங்கும் ஏணியில் ஏறத் துவங்கின.

இதற்கு பல விஷயங்களை காரணமாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மொபைல் போன்: இப்பட்டியலில் முதலிடம் வகிப்பது மொபைல் போன்கள். பத்தாம் வகுப்புக்கு செல்லும் முன்பே, மாணவர்களின் கைகளில் மொபைல் போன்கள் விளையாடத் துவங்குகின்றன. முதலில் வீடியோ கேம்ஸ் விளையாடத் துவங்கும் இவர்கள், மெதுவாக நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றனர். ஆரம்பத்தில் ஆண் நண்பர்களுக்கு செல்லும் மெசேஜ்கள், மெதுவாக நண்பிகளுக்கும் செல்ல ஆரம்பிக்கின்றன. சில நாட்கள் கழித்து இதுவும் “போர்’ அடித்துப்போய், “பலான’ படங்கள் பார்க்கத் துவங்குகின்றனர். தாங்கள் மட்டும் பார்த்தது போதாது என்று, உண்மையிலேயே படிப்பில் கவனம் செலுத்தி வந்த மற்ற நண்பர்களுக்கும் அனுப்புகின்றனர் அல்லது சேர்ந்து பார்க்கின்றனர். இந்த “புண்ணியத்தால்’, படிக்கும் மாணவர்களின் கவனமும் கந்தலாகிறது. இப்படியே இந்த வட்டம் பெரிதாகிறது.

ஆனால் மாணவிகளின் சூழ்நிலையே வேறு. இவர்களுக்கு அவ்வளவு எளிதாக மொபைல் போன்களை பெற்றோர் வாங்கித் தருவதில்லை. அவர்களின் நடமாட்டத்தை பெரும்பாலும் பெற்றோர் கண்காணித்தே வருகின்றனர். மாணவர்களைப் போல் இவர்களிடம் “பாக்கெட் மணி’யும் அதிகம் புழங்குவதில்லை. எனவே அனாவசிய செலவுகளுக்கும் வழியில்லை. போனுக்கு “ரீசார்ஜ்’ செய்ய வேண்டும் என்றாலும் அப்பாவோ அண்ணனோ தான் உதவ வேண்டும்.

இஷ்டத்திற்கு “தெரு, தெருவாக’ சுற்றும் வழக்கமும் தைரியமும் இல்லாததால், பெரும்பாலான மாணவிகள், பள்ளி முடிந்ததும் நேரே வீட்டுக்கு தான் நடையைக் கட்டுகின்றனர். இதனால் இவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமல், படிப்பு மீது திரும்புகிறது.

கிரிக்கெட்: மாணவர்களை அடுத்து கெடுப்பது “கிரிக்கெட்’. மழைக்கு மட்டும் பள்ளிக்கு ஒதுங்குவது போல், சில மாணவர்கள், கிரிக்கெட் விளையாடாத போது பள்ளி பக்கம் ஒதுங்குகின்றனர். விடுமுறை நாட்களில், படிப்பை கை கழுவிவிட்டு, கிரிக்கெட் பேட்டை தூக்கிவிடுகின்றனர். சாப்பாட்டைக் கூட மறந்து, கிரிக்கெட்டே கதி என கிடக்கும் மாணவர்கள் பலர். பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் வேறு எதையாவது செய்து “கெட்டுக் குட்டிச்சுவராய்’ப் போகாமல், விளையாட்டின் மீது கவனம் செலுத்துவதே மேல் என நினைத்து “சும்மா’ இருந்து விடுகிறார்கள். ஆக, இதனாலும் படிப்பு “பணால்’ ஆகிறது.

இதிலும் மாணவிகள் “கெட்டி’, கிரிக்கெட் மீது அதீத ஆர்வத்தை இவர்கள் செலுத்துவதில்லை. இதுவும் இவர்களைக் காப்பாற்றுகிறது.

சினிமா: மாணவர்களை கெடுப்பதில் அடுத்து முக்கிய இடம் பெறுவது “டிவி’ மற்றும் சினிமா. கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், எஸ்எம்எஸ் ஆகியவை போக, மீதி நேரம் இருந்தால் இவர்களுக்கு நினைவுக்கு வருவது “டிவி’யில் கிரிக்கெட் மேட்ச் அல்லது அபிமான ஹீரோ நடித்து ரிலீசான சினிமா. ரசிகர் மன்றம், கதாநாயகனுக்கு பாலாபிஷேகம், முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் “த்ரில்’ என இவர்களது “லட்சிய பாதை’, அவலட்சண பாதையாக மாறுகிறது.

இவ்வளவு “உபாதை’களையும் தாண்டி, மனசை கல்லாக்கி, பல்லைக் கடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்களே பொதுத் தேர்வில் சாதிக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் மனோதத்துவ நிபுணர்கள், “”இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர்களின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுகிறது. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிட்டால் மதிப்பிட முடியாத இளைஞர் சக்தியை நாம் இழந்து விடுவோம்.

அதற்கு பள்ளி பாடத்திட்டத்திலேயே மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். சமூகப் பொறுப்புணர்வு, பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, சமுதாயத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீதி, நியாயம் போன்றவை பற்றி பள்ளி கல்வியிலேயே சொல்லித் தர வேண்டும்” என்கின்றனர்.

இதை அரசு செய்யுமா?

மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு ???


காசு இல்லாத மக்களின் கவனதிற்கு ………..

இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை ???10509740_715116501917072_8324423986543170193_n?????
மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள் உறவினர் என மருத்துவர் ஏவ்வாறு உறுதி படுத்துகிறார் ?
அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?
சாதாரண மனிதனுக்கு 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப்பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்கவைத்து மூளை சாவு அடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.
அப்படி அடிபட்டு மருத்துவமனைக்கும் வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட்கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவினர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்துவிட்டார் இதுநாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகையை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடுதலாக பணமும் பெற்று தருகிறோம் என சொல்லமுடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது ………
ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந்துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரிமை அடிபடைஎல் தான் உறுப்பு தானம் வழங்க வேண்டும் .மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் …………கிட்னி திருடிய மருத்துவர்களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிக விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை யெடுக்கும் என நம்புகிறோம் …..
தயவுகூர்ந்து அனைவர்க்கும் பகிரவும்
கடந்த சிலவருடங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல்நாட்டவற்கும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A + ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்குறார்கள் ஆகவே இது குறித்து உங்கள் தயவுகூர்ந்து (தினமும் மருத்துவர்களால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்படவேண்டும்

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்


yaalvili-news-1stveppanjaffan

இன்று இலங்கை தமிழர்கள் பரவலாக உலகம் முழுக்க வாழ்கிறார்கள் , கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட. ஆனால் இதற்கு முன்பு ஈழ தமிழர்களின் குடியேற்றம் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்டது. கல்வித்துறையில் சிறந்து விளங்கியதால், பிரித்தானியர் யாழ்ப் பாண தமிழரை நிர்வாகம் சார்ந்த தொழிலுக்கு ஈடுபடுத்தினர். பலர் மலாயா ரயில் சேவை நிரவாகத்தில் வேலை செய்தனர்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர் தமக்கென ஒரு அடித்தளத்தை கலாசாரம், மதம், மொழி சார்ந்து ஏற்படுத்தினர். ஆனால் இந்த ஏற்பாடுகள் பல காலங்கள் நீடிக்கவில்லை, காரணம் முதலாம் உலக போர். ஐரோப்பாவில் ஜெர்மனி இக்கும் பிரித்தானிய- பிரான்ஸ் நேச படைகளுக்கும் இடையேயான பல லட்சம் உயிர்களை பறித்த கொடூர போர்.

போரின் ஆரம்பத்தில் விமானத்தின் பயன்பாடு ஆரம்ப நிலையே (விமானம் 1903 ம் ஆண்டு ரைட் சகோதரர்களால் கண்டு பிடிக்கப்பட்டது ) . முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம், எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

புதிய தாக்குதல் போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது. மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் அல்மா பேக்கர் என்பவர் , வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் கோலாலம்பூர் நில அளவைகள் திணைக்களத்தில் உயர் பதவியில் இருந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் Penang, Kuala Lumpur, Taiping, Pahang, Selangor, உட்பட பல இடங்களில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து 2250 பவுண்ட்ஸ் நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை செய்ய பங்களிப்பு செய்தார்.

இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது. இவ் விமானம் 22/12/1915 இல் பிரித்தானிய அரசிடம் கையளிக்கப்பட்டது.

இந்த இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

jaffna_war_flight02

பெண்கள் ஏன் கால் மேல கால் போட்டு உட்கார கூடாது???


பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்…

சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்…

இது அவர்களது நன்மைக்காகத்தான்…

என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

“மோனாலிசா” -ரகசியம்


10173421_436231453178162_1142758375_nலியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர். செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும். சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்

 

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்…


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

 

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.