இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தேர்வு



இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் 16 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு ???


காசு இல்லாத மக்களின் கவனதிற்கு ………..

இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை ???10509740_715116501917072_8324423986543170193_n?????
மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள் உறவினர் என மருத்துவர் ஏவ்வாறு உறுதி படுத்துகிறார் ?
அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?
சாதாரண மனிதனுக்கு 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப்பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்கவைத்து மூளை சாவு அடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.
அப்படி அடிபட்டு மருத்துவமனைக்கும் வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட்கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவினர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்துவிட்டார் இதுநாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகையை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடுதலாக பணமும் பெற்று தருகிறோம் என சொல்லமுடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது ………
ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந்துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரிமை அடிபடைஎல் தான் உறுப்பு தானம் வழங்க வேண்டும் .மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் …………கிட்னி திருடிய மருத்துவர்களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிக விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை யெடுக்கும் என நம்புகிறோம் …..
தயவுகூர்ந்து அனைவர்க்கும் பகிரவும்
கடந்த சிலவருடங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல்நாட்டவற்கும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A + ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்குறார்கள் ஆகவே இது குறித்து உங்கள் தயவுகூர்ந்து (தினமும் மருத்துவர்களால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்படவேண்டும்

ஈழத்தின் வடமாகாண சபைத்தேர்தல்


எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தல் (சிங்கள பௌத்த) பேரின

வாதத்திற்கும் தமிழ்த்தேசிய வாதத்திற்கும் இடையில் தொடர்ந்து

கொண்டிருக்கும் நீண்டதோர் மோதலின் அடுத்த கட்டம் என்றே நாம்

கருதுகின்றோம். இலங்கைத் தீவில் தனக்கென நீண்ட வரலாற்றையும்,

தெட்டத்தெளிவான வரையறுக்கப்பட்ட தாயகத்தையும் கொண்ட தமிழினம்

தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நடாத்தி

வந்திருக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக இல்லாதொழித்து தமிழ்

இனத்தின் இருப்பை காலப்போக்கில் நிர்மூலமாக்கும் தூரநோக்குடன்

செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின்

பிரதிநிதியான ஸ்ரீலங்கா அரசு வடமாகாண சபை தேர்தலை தனது

அரசியல் இராஜதந்திர மூலோபாயத்தின் இன்னுமோர் அம்சமாகவே கருதி

காரியமாற்றிக்கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையாகும்.

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பையும்,

பாதுகாப்பையும், அரசியல் அபிலாசைகளையும் எப்பொழுதுமே

கேள்விக்குறிக்கு ஆளாக்கி வந்திருக்கும் ஸ்ரீலங்கா அரசு முடிந்துபோன

யுத்தத்தின்போது தன்னால் நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான பாரிய மனித உரிமை

மீறல்கள் அகில உலகிற்கும் அம்பலமாக்கப்பட்டதன் விளைவாக, தன்மீது

பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச அழுத்தத்தை பலவீனப்படுத்த

முடியுமா என்ற நப்பாசையுடன் இத்தேர்தலை சந்திக்க முனைந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலில் வடமாகாணத்திலும் ஒருசில ஆசனங்களையும்

வென்றெடுப்பதன் ஊடாக ,தமிழ் மக்களின் மனங்களையும் ,இதயங்களையும்

தான் வென்றெடுக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு நிருபிக்க

முடியுமெனஅது திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த அரசியல் சூழ்நிலைகளில் எதிர்வரும் வடமாகாண

சபை தேர்தலை (விடுதலைக்கான) தனது இலட்சியப் பயணத்தின்

ஓர் திருப்புமுனையாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசிய இனத்திற்கு

நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.விடுதலையை நாடிநிற்கும் எமது

மக்கள் ஒற்றுமையாகவும், கட்டுப்பாடாகவும், விழிப்புணர்வோடும்

எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை ஸ்ரீலங்கா அரசிற்கு

எதிராகவும், தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து நிற்கும் தமிழ்த்

தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாகவும் பயன்படுத்த வேண்டியது

ஒரு வரலாற்றுக் கடமையாகும்.அந்தக் கடமையை நிறைவேற்றி தமிழ்

இனத்தின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு ஒவ்வொரு வாக்காளரும்

தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் அனைவரையும்

வேண்டிக்கொள்கிறோம்.

இலட்சிய உறுதியும் விடுதலை வேட்கையும் கொண்ட எம்

இனம் சிங்கள பௌத்த ஸ்ரீலங்கா அரசும், அதன் தமிழ் அடிவருடிகளும்

முன்வைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற மாயமானை நம்புவதற்கு

ஒருபோதும்தயாராக இல்லை என்பதனையும் எதிர்வரும் தேர்தலின்

முடிவுகள் பறைசாற்ற வேண்டும். தமிழ்த்தேசியகூட்டமைப்பில்

அல்லது தமிழ்தேசியக்கூட்டமைப்புபின் செயற்பாட்டில்

தமிழ்நெஞ்சங்களுக்கு அதிதிருப்தியோ அல்லது ஏமாற்றமோ இருந்தால்

அவற்றினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாளர்களுக்கு சுட்டிக்காட்டி

அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கான பொறுப்பு

உங்களுக்கே உரியது.ஏனெனில் தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை

ஸ்ரீலங்கா அரசிற்கும், சர்வதேச உலகிற்கும் வெளிப்படுத்துவதற்கான ஓர்

ஊடகம் தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பதனை எவரும் மறக்கவும்

முடியாது ,மறுக்கவும் முடியாது.எனவே (தமிழ்தேசியக் கூட்டமைப்பின்

வீட்டுச் சின்னத்தில் வாக்களித்து) எதிர்வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தின்

அரசியல் அபிலாஷைகளை தெளிவாகவும்,திட்டவட்டமாகவும் அகில

உலகிற்கு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துமாறு எமது மக்களை நாம்

அறைகூவி அழைக்கின்றோம்.

தமிழின எழுச்சியின் உச்சத்தில் யாழ்ப்பாணம்!!!!


ஈழத்தின் வட மாநில  தேர்தல் எதிர்வரும் இருபத்தியோராம் திகதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் சுயோட்சைகுளுக்களும்  போட்டியிடுகின்றன, இதில் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு  போட்டியிடுகின்றது. இக் கட்சி தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டது. எனவே இக்கட்சி  இந்த தேர்தலில் வெல்வதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளன. ஏன் எனில்  போட்டியிடுகின்ற ஒரே ஒரு தமிழ் கட்சி இதுவாகும்.1013011_206158396204861_814878855_n

இப்பொழுது  இங்கு பிரச்சாரங்கள் மிகவும் சூடாக இடம் பெரும் அதே நேரம்  தலைவர் பிரபாகரனுடைய  பெயர் மற்றும் புகைப்படங்களை வேட்பாளர்கள்  பயன்படுத்துவது சாதரணமாக இடம்பெறுகிறது.

அது மட்டுமல்ல சிவப்பு மஞ்சள்  கொடிகளும் பறக்க விடப்படுகின்றன.இதனால் சிங்களம் ஆடிப்போய் உள்ளது

2009 இல்  யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஈழத்தில் இவாறான எழுச்சி நிகழ்வுகளை காண முடிவதில்லை,  யாழ் பல்கலைகழக மாணவர்கள் மட்டும் அவவப்போது நினைவு தினங்களை அனுட்டிப்பர்கள்.

இப்போது வட மாகாணம் முழுவதும் தமிழ் மக்கள்  எழுச்சியுடன் காணபடுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இளைஞர்களும்  மிகவும் உட்சாகத்துடன் பிரசாரங்களை மேட்கொள்கின்றனர். எனினும் சிங்கள ஒட்டுகுளுக்கள் ஆங்கங்கே இவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும்  தொடர்கிறது.

IMG_1941

எது எப்பிடியோ  எமது உடலை , உடமைகளை நீ அழிக்கலாம்…. அனால் எமது உணர்வுகளை உன்னால் அழிக்க முடியாது …. என்று  உணர்ச்சி  பொங்க  தமிழனுக்கே  உரிய வீரத்துடன்  ஈழ தமிழினம் வெற்றி நடை போடுகிறது.

இந்த தேர்தல் வெற்றியே அவர்களின் இலட்சிய வெறியை  உலகுக்கு உணர்த்தும்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா?


விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம்வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!

prabakaran_250உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர். (இன்னும் நிறைய வரலாம்)

மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப் பட்டுக்கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.

இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.

இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.

இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.

காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வறட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.

பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?

விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெருபலம் அவர்களுக்குக் கிடைத்தது?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம்.
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.

LTTE_women_wing

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப் படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?

சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?

மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…

தரைப்படைகள்

* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

கடற்படைகள்.

* நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.

* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது

என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?

தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்தால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.

ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!

* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?

* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.

* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?

* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?

* இதே போல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?

* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?

* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.

* உயிரைப் பாதுகாக்க பதுங்குக் குழிக்குள் ஒளிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?

இப்படியாக….

ஈழத்தமிழன் ஒளிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயம்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?

மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?

அவ்வாறெனில்….

உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?

மாறாக… விடுதலைப்புலிகள்

ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..

சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….

அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ…. நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!

எது ஜனநாயகம்….?
எது தீவிரவாதம்….?
யார் தீவிரவாதி….?
யார் ஜனநாயகவாதி….?
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?

தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா? உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!

தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….

குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்… உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!

இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ…. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!

இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்றவர்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்…. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது! விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும்வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!

– வல்வை அகலினியன் ( akaliniyan@yahoo.com)

சடலத்தின் மீது புலிக்கொடி !!!!திரையுலகினர்,அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி ( படங்கள் )


மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்இ நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதி சடங்கு நாளை நடக்கிறது.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்

ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிப்போருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

கோவையை சேர்ந்தவர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும்.

3ம் இணைப்பு

என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

நடிகர் சத்யராஜ் உடன் இணைந் அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.

என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.

என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.