உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி நடாத்தும் சூப்பர் சிங்கர்.
கடந்த சில வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் வாக்களித்தனர்.
இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.
6 பேர் பங்கேற்ற இந்த இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஈழத்தமிழ் சிறுமி ஜெசிக்கா இரண்டாம் இடம் பிடித்து 1 கிலோ தங்கம் வென்றார்.
கனடாவில் வசிக்கும் இவர் இந்த தங்கத்தில் பாதியை இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கும், மற்றொரு பாதியை ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகளுக்கும் வழங்கி அனைவரின் மனதையும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளார்.
ஜெசிக்கா தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கும், இலங்கையில் உள்ள வறியவர்களுக்கும் தானமாக வழங்கப்போவதாக தந்தை மூலம் தெரிவித்திருந்தமை பாராட்டுக்குரியதே.
இவள் இச்சுற்றில் பாடிய பாடல் அரங்கில் நின்றவர்களை மட்டும் அல்லாது உலகமெங்கும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான உலகத்தமிழர்களை உருக வைத்து விட்டாள்
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா? என்று தொடக்கி விடை கொடு எங்கள் நாடே பாடலையும் இணைத்து உலகமெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களை நெகிழச்செய்து தனக்கு கிடைத்த மேடையை ஈழ மக்களின் உணர்வுக்களமாய் அமைத்து விட்டாள்.