சிறிலங்கா வழியாக சீனர்கள் ஊடுருவல்? – இந்தியாவின் கண்காணிப்பு தீவிரம்


தமிழ்நாடு கடல்பகுதியில், சிறிலங்காவின் துணையுடன் சீனர்கள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுந்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம், சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால் அது குறித்து தகவல் தரும்படி இந்தியக் கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குள் அந்நியர்கள் குறிப்பாக, சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக 04573-241238, 04573-242020 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தமிழ்நாடு மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், இராமேஸ்வரம் அருகேயுள்ள ஐந்தாம் திட்டு தொடக்கம், கோடியக்கரை வரையான கடற்பகுதியில் முன்னரை விடவும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க, மீனவர்கள் உதவ வேண்டும் என்றும், அவர் கோரியுள்ளார்.

இந்தியாவின் வடக்கு எல்லையில் அண்மைக்காலமாக சீனப் படையினரின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையிலேயே, தெற்கில் தமிழ்நாட்டின் வழியாகவும் சீன ஊடுருவல் நிகழலாம் என்றும் இந்தியா கருதுகிறது.

இதற்கிடையே, அனைத்துலக கடல் எல்லையை தாண்டும் தமிழ்நாட்டு மீனவர்களை செய்மதிகளின் துணையுடன் படம்பிடிக்கும், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி வருகிறது.

மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிவேரிய வன்முறை தொடர்பில் அமெரிக்கா அக்கறை


 

வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசானது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கான மக்களின் உரிமையை மதிக்கவேண்டுமெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசானது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கான மக்களின் உரிமையை மதிக்கவேண்டுமெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தெரணியகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!தெரணியலை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரபாத் தேசபந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிப்படையைச்சேர்ந்த முன்னாள் அதிகாரியான இவர், 19 தினங்களுக்கு முன்புதாக் தெரணியகலவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த வன்முறை கும்பலை கைது செய்யும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரான அனில் சம்பிக்கவின் சகோதரியை நூரி தேயிலை தோட்டத்தில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்.

மேலும், தற்போதைய பிரதேச சபையின் தலைவரான அநுர விஜேசூரிய நடத்திவந்த மதுபானசாலை உத்தியோகபூர்வா அனுமதி இல்லாமல் நடத்தியதற்காக அதனை மூடும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தெரணியகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தெரணியலை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரபாத் தேசபந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிப்படையைச்சேர்ந்த முன்னாள் அதிகாரியான இவர், 19 தினங்களுக்கு முன்புதாக் தெரணியகலவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த வன்முறை கும்பலை கைது செய்யும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரான அனில் சம்பிக்கவின் சகோதரியை நூரி தேயிலை தோட்டத்தில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்.

மேலும், தற்போதைய பிரதேச சபையின் தலைவரான அநுர விஜேசூரிய நடத்திவந்த மதுபானசாலை உத்தியோகபூர்வா அனுமதி இல்லாமல் நடத்தியதற்காக அதனை மூடும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை எழும்பூரில் நடுரோட்டில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி


செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 36). இவர் இன்று பகல் 11 மணி அளவில் கையில் மண்எண்ணெய் டின்னுடன், எழும்பூர் ஆதித்தனார் சாலையில், மாஜிஸ்தி ரேட்டுகள் குடியிருப்பு அருகே வந்தார். டின்னில் இருந்த மண்எண்ணெயை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த பெண்மணியை தீக்குளிக்க விடாமல் தடுத்தார்கள். பின்னர் இதுகுறித்து எழும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போலீஸ் படையுடன் விரைந்து வந்தார்.

தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் பெயர் ஆனந்தன் என்று தெரிய வந்தது. தனது உறவினர் ஒருவர் தன்னிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை திருப்பிக்கேட்டால் தர மறுத்து மிரட்டுவதாகவும், இதனால் போலீஸ் நடவடிக்கைக்கு கோரிக்கை வைத்து, தீக்குளிக்க முயற்சித்ததாகவும், இளம்பெண் கோட்டீஸ்வரி போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

அவரது கணவரை போலீசார் வரவழைத்தனர். கோட்டீஸ்வரி, அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். செங்கல்பட்டு போலீசில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவுரை வழங்கி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி! சோகத்தில் மூழ்கிய உத்திரமேரூர்!


காஞ்புரம் மாவட்டம் உத்திரமேரூ்ரை சேர்ந்த நடராஜன் என்பவரது குழந்தைகள் லதா (வயது 13), கீதா (12), திருமலை (9). இவர்கள் 3 பேரும் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் லதா, கீதா, திருமலை ஆகிய 3 பேரும் பள்ளிக் கூடம் செல்லும் முன்பு குளிப்பதற்காக அருகில் உள்ள வேடப்பாளையம் ஏரிக்கு சென்றனர்.

ஏரியில் இறங்கி குளித்த போது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். ஏரிக்கு குளிக்க சென்ற அவர்கள் திரும்பி வராததை அடுத்து நடராஜன் அங்கு சென்று தேடினார். அங்கு அவர்களது ஆடைகள் கிடந்தன. ஆனால் அவர்கள் இல்லை. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது, லதா, கீதா, திருமலை ஆகிய 3 பேரையும் சடலமாக மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் உத்திரமேரூ்ர் சோகத்தில் மூழ்கியது.

மன்மோகன் சிங் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும்.


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நாளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு மின் நிலைய பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை யை திறந்துவைக்க வரும் பிரதமர் வருகையை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. தனது அரசு தமிழக மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசின் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முன்பு நடத்தும் நாடகம் இது.

நேரம் ஒதுக்கி 350 கோடி ரூபாய் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் பிரதமர், பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவிலான கூடங்குளம் அணுமின் திட்டத்தை திறக்கவோ, அல்லது வந்து பார்க்கவோ விரும்பாததன் மர்மம் என்ன என்று கூடங்குளம் பகுதி மக்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் வியக்கிறோம். ஊழல் மிகுந்த, தரமற்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூடங்குளம் அணு மின் திட்டம், உலக நாடுகள் பலவற்றோடு அணுமின் ஒப்பந்தங்கள் செய்து கொண்ட பிரதமரின் விருப்பத் திட்டம்.

ஆபத்தான, கதிர்வீச்சு மிகுந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க முயலும் பிரதமர் கூடங்குளத்துக்கு வந்து அணுஉலையப் பார்த்து செல்வதுதானே முறை? இந்தத் திட்டம் தரமானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது என்று இங்கே வந்து மக்களிடம் சொல்லி ஆறுதல்படுத்திச் செல்லலாமே? கூடங்குளம் திட்டம் வந்தாக வேண்டும் என்று விரும்பும் பிரதமர் இந்தியாவிலேயே மிகப் பெரிய, நீண்டகாலமாகக் கட்டப்படும் இந்த கூடங்குளம் அணுஉலையை வந்துப் பார்க்க விரும்பாதது ஏன்? அவர் ஏன் வர மறுக்கிறார்? இது தரமற்ற, பாதுகாப்பற்ற அணுஉலை என்று நினைப்பதுதான் காரணமோ? அவருடைய சகாக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது போல, கூடங்குளம் அணு உலை சரியாக ஓடவில்லையோ? இது ஒரு மக்களுக்கான அணுசக்தித் திட்டம் என்றால், ஏன் இத்தனை இரகசியமும், மூடி மறைப்பும் நடக்கிறது கூடங்குளத்தில்?

இந்தியப் பிரதமரும், அணுசக்தித் துறை அமைச்சருமான மன்மோகன் சிங் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும். பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகையை கோடிக் கணக்கான தமிழ் மக்களோடு இணைந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. நாளை இடிந்தகரையில் கருப்பு தினம் அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.