படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: நடிகை சனாகான்

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘நடிகையின் டைரி’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், சில்க் சுமிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். அனில் டைரக்டு செய்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

அதன்பிறகு நடிகை சனாகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சனாகான் அளித்த பதில்களும் :

 சில்க் சுமிதாவின் படங்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

அவர் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு ஆனதும், இணையதளத்தில் அவர் நடித்த படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகளை பார்த்து தெரிந்துகொண்டேன்.

 அவருடைய மரணம் பற்றி உங்கள் கருத்து என்ன?

 சில்க் சுமிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தரப்பினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னொரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும், சில்க் சுமிதாவின் மரணம் திரையுலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

நிஜ வாழ்க்கையில் சில்க் சுமிதாவுக்கு நடந்த சோகங்கள் உங்களுக்கும் நடந்தால், என்ன செய்வீர்கள்?

நான் தைரியமான பெண். நான் யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். என் சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஒரு ஆண் மகனாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிப்புக்குள்ளாக மாட்டேன்.

 சினிமாவில், செக்ஸ் உடன்பாடு செய்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று ‘நடிகையின் டைரி’ படத்திலேயே வசனம் வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

செக்ஸ் உடன்பாடு வைத்துக்கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

சில்க் சுமிதாவின் வேடத்தில் நடிப்பதால், அவருடைய ஆவி உங்கள் கனவில் வந்தால்…?

நிச்சயமாக சில்க் ஆவி என்னை மிரட்டாது. பாராட்டும். என் வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்லும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s