சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர்


ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது

ராஜ் பவுண்டேசன்……….1,89,008 கோடி
அர்சத்மேதா……………..1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்………28,900 கோடி
ராஜீவ் காந்தி………………19,800 கோடி
கருணாநிதி………………..35,000 கோடி
சிதம்பரம்…………………..32,000 கோடி
சரத் பவார்…………………28,000 கோடி
கலாநிதி மாறன்……………15,000 கோடி
HD குமாரசாமி…………….14,500 கோடி
JM சிந்தியா………………….9,000 கோடி
கேடன் பிரகாஷ்………………8,200 கோடி
A ராஜா………………………7,800 கோடி
சுரேஷ் கல்மாடி………………5,900 கோடி

ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
http://i.imgur.com/bO3dF.png

 

காதலர் தினம் சிறப்புச்சலுகை


அடுத்தவாரம் காதலர் தினம் வருவதையொட்டி எல்லா மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் வரிந்திகட்டிக்கொண்டு சிறப்புச்சலுகைகளை வாரிவழங்குகிறது.

அதிலும் இம்முறை கொடுமைப்பா! ஒரு போன் வாங்கினால் மொற்றொரு போன் இலவசமாம்! நீங்களும் புதியபோன் வாங்கவேண்டுமானால் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

phone

பேஸ்புக் உதவியுடன் கைது


facebokk

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.2.5 லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை பொலிசார், ‌ பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த விஜய் சவுத்ரி (வயது 23), மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜய் சவுத்ரி நாக்பூருக்கு தப்பியோடி விட்டதும், தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் பெண்களுடன் டேட்டிங் மற்றும் விருந்துகளுக்கு செலவழித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சவுத்ரியை பிடிக்க பேஸ்புக் என்ற வலையை விரித்தனர் மும்பை பொலிசார். பேஸ்புக்கில் பெண் ஒருவரின் பெயரில் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது.

அதன் மூலம் விஜய் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது பொலிசாரால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணராத சவுத்ரி, அந்த பெண் நண்பருடன் அளவளாவியுள்ளார். பின்னர் அந்த பெண் நண்பரை பார்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையம் வந்தால் தன்னைப் பார்க்கலாம் என கூறியதும் மும்பை கிளம்பியுள்ளார் சவுத்ரி. தங்கள் பணி உரிய திசையில் பயணிப்பதை அறிந்த பொலிசார் சவுத்ரிக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

எதிர்பார்த்தபடியே, அங்கு சவுத்ரி வர, பொலிசிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான் சவுத்ரி. துரதிருஷ்டவசமாக, சவுத்ரியிடமிருந்து வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் வழக்கம் போல், பெண்களுக்காக செலவழித்துள்ளார் சவுத்ரி.

பேஸ்புக்கில் மட்டும் 5 கோடி போலி அக்கவுண்ட்கள் உள்ளன என்பது கவனத்திற்குரியது.

ஏமாற்றி திருமணம் செய்த பெண் திண்டுக்கல்லில் கைது


kilma-rani

வீடு மற்றும் நகைக்காக இரண்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விக்டோரியா ராணி என்ற பெண், திண்டுக்கல்லில் கணினி நிறுவனம் நடத்தி வந்த சித்திக் என்வரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

அப்போது, தனது பெயரை வகிதா ராணி என மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

வகிதா பெயரில் வீடு மற்றும் நகைகள் வாங்கிக் கொடுத்த நிலையில், சித்திக்-குத் தெரியாமல் கடந்த மாதம் 23-ந் தேதி ஜெயராஜ் கணபதி என்பவரை திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேட்ட போது, விக்டோரியா ராணியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சித்திக் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, விக்டோரியா ராணி, அவரது தாயார் மரிய புஷ்பம், உறவினர்கள் ராணி, அருள்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விக்டோரியா ராணியை 2-வது திருமணம் செய்த ஜெயராஜ் கணபதி உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்

முதலில் வைகோ தமிழகத்தில் ஜெயிக்கட்டும் பார்க்கலாம்”-இலங்கை அமைச்சர் கிண்டல்


“அங்கிட்டு ஜெயிச்சிட்டு... இங்கிட்டு வாங்க”

 

“இந்தியாவின் மாநில அரசியல்வாதிகளை திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது” என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. “ம.தி.மு.க. என்ற மாநில கட்சி தலைவர் வை.கோ. போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை” என இலங்கை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், “அயல் நாடான இந்தியாவுடன், இலங்கை அரசு ராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, அணிசேரா தன்மையைக் கொண்டது. இதனால் இந்தியாவைப் போன்றே சீனாவுடனும் சிறந்த உறவுகள் பேணப்படும்.

ஆனால், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நட்புறவை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தியாவில் சொந்த மாநிலத்திலேயே ஜெயிக்க முடியாத, மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள், தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சிகள் பலிக்காது.

இந்தியாவில், அவர்களது சொந்த மாநிலத்தில்கூட 10 சதவீத ஆசனங்களை ஜெயிக்க முடியாதவர்கள், வெளிநாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியுமா? இதனால், ம.தி.மு.க. என்ற மாநில கட்சி தலைவர் வை.கோ. போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை” என்றார்.

மாணவியை ‘விபசாரி’ என்று கூறிய ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக வழக்கு!


ஹைகோர்ட் தீர்ப்பு கடும் சர்ச்சை

ஹைகோர்ட் தீர்ப்பு கடும் சர்ச்சை

ஹைகோர்ட்டின் முன்னாள் நீதிபதி, மாணவி ஒருவரை விபசாரி எனவும், அவர் விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது எனவும் கூறிய தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து நேற்று கேரள சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

கேரளா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய ஹைகோர்ட்டின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான வசந்த், ‘‘வழக்கில் தொர்புடைய மாணவி விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது’’ என்று தீர்ப்பு கூறியிருந்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தியும் இருந்தார்.

நீதிபதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் அவருடைய இந்த கருத்தை எதிர்த்து அவதூறு வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி வழங்கும்படி, கேரள மாநில அரசு தலைமை வக்கீலிடம், எம்.பிரகாஷ் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த பிரகாஷ், கேரள ஹைகோர்ட்டின் முன்னாள் ஊழியர்.

பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “நீதிபதி வசந்த் தெரிவித்த கருத்துகள் பொறுப்பற்றவை. அவர் வகித்து வந்த ஹைகோர்ட் நீதிபதி பதவியின் கண்ணியத்துக்கு பொருத்தமானவை அல்ல. இது, நீதித்துறைக்கு எதிரான கிரிமினல் அவதூறு” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.