ஆசிரியைகளுடன் தலைமை ஆசிரியர் – செக்ஸ் வீடியோ

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சோலையார் எஸ்டேட் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியருக்கும், ஏற்கனவே அந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகளுக்கும் இடையே செக்ஸ் தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் இன்டர்நெட், செல்போன்களில் வெளியாகின.

இதைத்தொடர்ந்து சோலையார் பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோரும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதன் பின்னர் இந்த சம்பவம் அடங்கி இருந்தது. ஆனால் தற்போது செக்ஸ் போட்டோ பிரச்சினை வீடியோ பிரச்சினையாக மாறி மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியரும், ஆசிரியையும் உல்லாசமாக இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 7 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காட்சியில் ஆசிரியையும், தலைமையாசிரியரும் பள்ளி அறையில் உல்லாசமாக இருப்பது அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பல பெண்கள் மற்றும் ஆசிரியைகளுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்களை தனது வீட்டுக்கே அழைத்து வந்து அங்கு உல்லாசமாக இருப்பது போன்ற அந்த காட்சிகள் உள்ளன.

இந்த படக்காட்சிகள் வால்பாறை பகுதிகளில் உள்ள இளைஞர்களின் செல்போன்களில் புளு டூத் மூலம் முதலில் பரவியது.

தற்போது மாவட்டம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. இது சோலையார் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று மாலை தேயிலை தோட்டத்துக்கு பணிக்கு சென்றிருந்த பெண் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள், பெண்கள் என ஏராளமானோர் சோலையார் அரசு பள்ளிக்கு வந்தனர். பள்ளி யை முற்றுகையிட்டு அவர்கள் திடீர் போராட்டம் நடத்தி னார்கள்.

 

செக்ஸ் வக்கிர புத்தியுடன் வலம் வந்துள்ள தலைமை ஆசிரியரால் தங்களுக்கு அவமானம் ஏற்படு வதாகவும் அந்த ஆசிரியரை பள்ளியில் இருந்து மாற்றி ஊரை விட்டே துரத்த வேண்டும் என்றும் அவர் மீது போலீசார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இது குறித்த தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s