பீதி கிளப்பும் ‘வனயுத்தம்’


 வீரப்பனின் வாழ்க்கையை தமிழ், மற்றும் கன்னடத்தில் படமாக்கி வருகிறார் டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ். ‘வனயுத்தம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் வீரப்பனாக கிஷோரும், போலீஸ் அதிகாரியாக அர்ஜீனும் நடித்திருக்கிறார்கள்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

வீரப்பனின் கதை என்பதால் அதில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருக்கின்றன. அதனால் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்தப்படத்துக்கு எதிராக தொடர்ந்த முத்துலட்சுமி வழக்கில், அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை மட்டும் படத்திலிருந்து நீக்கி விட்டு வருகிற 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

இதையடுத்து இந்தப்படத்தை வரும் 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முழு ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் படத்தின் டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ் இப்படி பல தடைகளைத் தாண்டி வெளிவந்த குஷியில் படம் குறித்தான சில தகவல்களை இன்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்..

அப்போது அவர் “முத்துலட்சுமி இந்தப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று கோருவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல இந்தப்படத்துக்கு எதிராக நக்கீரன் கோபால் அவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அவர் செய்ததிலும் எந்த தவறும் இல்லை. யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,

பல சிக்கல்களை தாண்டி இந்தப்படத்தை வருகிற 14- ஆம் தேதி வேந்தன் மூவிஸ் எஸ். மதன் அவர்கள் ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படத்தை ஆரம்பித்த போதே அவருக்காக இந்தப் படத்தை உருவாக்கினேன். இப்போது அவருக்கு பிடித்த மாதிரி நான் இந்தபடத்தை எடுத்திருக்கிறேன். படத்தை ரொம்ப நடுநிலையாக யார் மனதும் புண்படாதவாறு எடுத்திருக்கிறேன்.

யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமில்லை. இந்தப்படத்துக்காக சுமார் 10 வருடங்களாக வீரப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர்களை நேரில் சந்தித்து தகவல்களை சேகரித்திருக்கிறேன். அதனடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்து படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்த்த சென்சார் போர்டு மெம்பர்கள் படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் முழு வரிச்சலுகையும் இந்தப்படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

பிறகு அவரிடம் உங்களுடைய அடுத்த படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று கேட்டபோது “அடுத்து நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். அதுதான் என் ஆசை. அப்படி எடுத்தால் கண்டிப்பாக ஈழத்து மக்களிடமிருந்து எனக்கு எதிர்ப்பு வராது” என்றார்.

 

பணத்தால் எனக்கு பயன் இல்லை: சொல்பவர் பில்கேட்ஸ்.


உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை பொறுத்தவரையில், நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுக்கு மேல்என்னிடம் பணம் இருந்து பயனேதுமில்லை. ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் என் பணத்தை எல்லாம், உலக ஏழை எளிய மக்களுக்காகச் செலவிட விரும்புகின்றேன்.போலியோவை ஒழித்ததுபோல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு, நோய்தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பணிகளில் தொண்டாற்றும் பெண்களுக்கும் என் பணத்தைச் செலவழிக்கத் தீர்மானித்து உள்ளேன்.கடந்த, 1990ம்

ஆண்டில், ஐந்து வயதைத் தாண்டாத, 1.20 கோடி குழந்தைகள் நோயால் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், 70 லட்சமாகக் குறைந்து உள்ளது.

இதேபோல், குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களில் இருந்து, அக்குழந்தைகளை பாதுகாக்கவும், நோய்களை அழிக்கவும், அறக்கட்டளை மூலமாக, என் பணத்தைச் செலவிட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, பில்கேட்ஸ் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான சுயாட்சியை மஹிந்த நிராகரித்துள்ளார்- இந்து


தமிழர்களுக்கான சுயாட்சியை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என  த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் தாம் மனதில் ஒரு தீர்வை கொண்டிருப்பதாக 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அனைவருக்கும் சமஉரிமை என்ற அடிப்படையில் அந்ததீர்வை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் வித்தியாசமான சமூகங்கள் வாழும் வடக்கில், இன அடிப்படையில் சமய அடிப்படையில் தமிழர்களுக்கு சுயஆட்சியை ஏற்படுத்த முடியாது என்று ஜனாதிபதி தற்போது கூறியுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இன அடிப்படையில் வித்தியாசமான நிர்வாகங்களை நடத்த முடியாது.

எனவே இனப்பிரச்சினைக்கு அனைத்து இனங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுதேயாகும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க


இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை எதனையும் விடுக்கவும் இல்லை அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுக்கவும் இல்லை என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் 50 நாடுகளைச்சேர்ந்த சுமார் 102,000  படையினர் ஆப்கானிஸ்தானில் கடமையில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படை அறிவித்துள்ளது.

பல வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2004 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறுவதற்கு தீர்மானித்திருந்தன. ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற படையில் 68இ000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வன்னியில் கடும் மழை


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென கொட்டித் தீர்த்த கன மழையினால் அங்கு மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென பெய்த மழையினால் வன்னியில் வயல்களில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்து நாசமாகின. ஏற்கனவே நெல்விதைப்பின் போதும் கொட்டிய மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெற்பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டிருந்தன. இந்தப் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குள் அவர்களை மீண்டும் பாதிப்படையச் செய்திருக்கிறது நேற்றைய கனமழை.
நெற்பயிர்களின் அறுவடை கடந்த சில நாள்களாக வன்னியில் மும்முரமாக நடந்தன. ஏற்கனவே மழையினால் அங்கு நெற்செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர். இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய தப்பிய நெற்பயிர்களாவது உதவும் என அவர்கள் நம்பியிருந்தனர்.
அவர்களின் நம்பிக்கையை பொய்ப்பிக்கும் வகையில் நேற்று மாலை அங்கு கடும் மழை விடாமல் பெய்தது. நேற்று இரவு வரை மழை தொடர்ந்தது.
அதனால் வயல்களில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெற் கதிர்கள் நனைந்து நாசமாகின. அத்துடன் அறுவடை செய்யப்படாத வயல்களில் இருந்த நெற் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கின. வன்னி விவசாயிகள் இதனால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதேவேளை, கடும் மழையினால் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பன்னங்கண்டி மகாவித் தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

யாழில் துண்டுக் காணியும் இன்றி 11 ஆயிரத்து 500 குடும்பங்கள்!


யாழ். குடாநாட்டில் ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11 ஆயிரத்து 500 தமிழ்க் குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என்று, வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் தமிழ் மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் பொருட்டு காணிக் கச்சேரிகளை வடமாகாண காணி ஆணையாளர் அலுவலகம் நடத்தவுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள காணியற்றோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான தமிழ்க் குடும்பங்கள் காணிகள் இல்லாமலுள்ளன.

காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவினால் காணியற்றோருக்கு தலா இரண்டு பரப்பு வீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்பது குறிப் பிடத்தக்கது.